Supreme Court refuses to consider 377 review petitions [Tamil]
பிரிவு 377 தொடர்பான மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
இந்திய தண்டனைப் பிரிவு 377 தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிமன்றம் இன்று அனுமதிக்க மறுத்தது. இந்திய அரசு (யூனியன் ஆஃப் இந்தியா), LGBTQ நபர்களின் பெற்றோர், 377ஐ எதிர்க்கும் குரல்கள், ஆசிரியர்கள், மனநல நிபுணர்கள், ஷ்யாம் பெனெகல், நாஸ் அறக்கட்டளை ஆகியோர் தாக்கல் செய்திருந்த எட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கௌஷல் Vs நாஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எண்ணற்ற பிழைகள் இருக்கும் நிலையிலும் மறுபரிசீலனை மறுக்கப்பட்டிருப்பது அநீதி. மனுதாரர்களின் வாதங்களை நீதிமன்றம் முற்றிலுமாகப் புறக்
எனினும் LGBTQ சமூகம் இதனால் மனம் தளரவில்லை. நீதிமன்றத்தின் இந்த நீதியின்மை, உரிமைக்காகப் போராடும் எங்களுடைய செயல்பாடுகளை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. இந்த நாட்டில் அச்சமின்றியும், புறக்கணிப்பு மற்றும் வன்முறையை எதிர்கொள்ளாமலும் வாழ வேண்டும் என்ற எங்களது உறுதி இன்னமும் வலு பெற்றுள்ளது. ஊடகங்கள், முக்கிய அரசியல் கட்சிகள், பொதுமக்கள், LGBTQநபர்களின் குடும்பங்கள், மனநல நிபுணர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக துணை நின்றுள்ளனர். இந்திய அரசியல் சட்டம் வழங்கும் சம உரிமை, மனித கௌரவம் ஆகியவை எங்களுக்கும் உரித்தானவை என்று இவர்கள் நம்புகின்றனர். எங்களது கோரிக்கைகளையும் போராட்டங்களையும் அலட்சியம் செய்வது தவறு என்பதைத் தங்களது ஆதரவின் மூலம் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களிடையே திரண்டு எழுந்துள்ள இந்த ஆதரவை ஏற்றுக்கோண்டு கூடிய வலிமையுடன் எங்களுடைய போராட்டத்தைத் தொடர்வோம். மனித உரிமைகளை மீறும் பிரிவு 377-ஐ எதிர்த்த எங்களது சட்ட ரீதியான போராட்டம் தொடரும். இது குறித்து எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து உச்ச நீதிமன்றம் செய்திருப்பது அநீதி என்பதையும், அது சமத்துவம் மற்றும் மனித கௌரவத்திற்கு எதிரான செயல்பாடு என்பதையும் நிலைநாட்டுவோம். ஒரு சமூகமாக ஒன்று திரண்டு நாங்கள் ஒதுக்குதல், புறக்கணிப்பு, வன்முறை ஆகியவற்றை சந்திக்காமல் இருப்பதற்கு ஆவன செய்வோம். பாலியல்பு மற்றும் பாலினம் காரணமாக எவரும் ஒதுக்கப்படக் கூடாது என்று அனைத்து மக்களிடமும் நிறுவனங்களிடமும் வலியுறுத்துவோம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த நிராகரிப்பைத் தற்காலிகமானதாகவே கருதுகிறோம். ஒருபாலீர்ப்பை குற்றமாக்கும் சட்டங்களுக்கு எதிராக உலகெங்கும் நடந்திருக்கும் போராட்டங்களின் வரலாறுகளைப் பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது: போராட்ட காலங்கள் நீண்டவையாக இருப்பினும், அநீதியான சட்டங்கள் கண்டிப்பாக தங்களுடைய முடிவை சந்திக்கின்றன. 11.12.13 அன்று எங்கள் போராட்டத்தின் புதிய அலை தொடங்கியது. இனி பின்வாங்கும் எண்ணமில்லை. நாங்கள் எங்கள் மீது கொள்ளும் பெருமிதத்தை உச்ச நீதிமன்றத்தால் ஒன்றும் செய்துவிட இயலாது. 2009ல் தில்லி உயர் நீதிமன்ற கூறியது போல் எங்களது உரிமைகள் எங்களுடையவையே. அவற்றை வழங்கியது உச்ச நீதிமன்றமல்ல. அவற்றை எங்களிடமிருந்து பரிக்கும் வலிமையும் அதனிடம் கிடையாது.
More on this, written prior to the news from Supreme Court
Review Petition Process explained, by Mayur Suresh
Reviewing Our Options by Vikram in English and Tamil
The Supreme Court dismissal statement is here.
One Comment