2010 – Home

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – திருவள்ளுவர்
Can love be shackled? – Thiruvalluvar

Chennai hosts its second annual Rainbow Pride in June 2010, a month celebrating visibility of alternate sexualities and gender identities.

Several formal and informal collectives have joined hands to organize a month-long series of events in Chennai this June. These include a debate on homosexuality and family values; an LGBT performance festival; a poetry reading event; a meeting of parents of LGBT people; art, slogan, placard and beauty contests; and film screenings; culminating in the Chennai Rainbow Pride march to be held on June 27th, 2010. These events are listed on our Events page.


KURALGAL (குரல்கள்) – Placard, slogan and poetry contest for Chennai Pride 2010:

Out and proud? Quiet and discreet? Queer or Ally? Be heard! Be seen! Calling all you creative folks out to there to participate in our KURALGAL pride contest. Submit slogans, placards (text or design), and poems for Chennai pride 2010. Click here for more details


We invoke the words of Tamil poet Thiruvalluvar to ask அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (Can love be shackled?) Our loves and identities fall outside of the norm of exclusive male-female desires, gender identities and expectations, and are reviled as unnatural and foreign. However these loves and identities are natural to us and have existed since ancient times in our own cultures. That we are not contained within the common definitions of permissible sexuality and gender expressions does not make us undeserving of equal human rights.

This Pride,

- We celebrate the love that was decriminalized by Chief Justice A.P. Shah and Justice S. Muralidhar of Delhi High Court in the historic Naz Foundation verdict of July 2, 2009.

- We call upon the Supreme Court to uphold the judgment in its entirety, and secure the fundamental rights of India’s lesbian, gay, bisexual and transgender citizens to lives of dignity, equality, and free expression.

- We lament the loss of Prof. Shrinivas Ramchandra Siras and countless other citizens, and call for an immediate end to violence, harassment and persecution of LGBT people by educational institutions, employers, law enforcement, religious institutions, and the public. Too many lives have been lost to irrational fear and hate.

- We request that hijras and other transgenders be recorded in the 2011 national census, in the category corresponding to their gender of choice, and not be limited by the currently available binary choices of ‘male’ and ‘female’.

- We seek affordable and appropriate healthcare for all, and condemn unscientific and unethical attempts by some in the medical and mental health professions to change sexual orientation through drugs, electro-shock therapy, and other means.

- We ask that our families value our desires as natural and normal, allow us the freedom to choose our expression in terms of attire, romantic and life partners, and not to force us into heterosexual marriages against our wishes.

- We appeal to the media to be fair, inclusive and responsible in telling our stories; not perpetuate stereotypes, myths and misinformation about our lives; and not invisibilize or trivialize us and our issues.

Support us by signing on to the Campaign for Open Minds at http://www.orinam.net/campaigns


“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர்

இந்த ஜூன் மாதம், சென்னை இரண்டாவது முறையாக, தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை ஆதரிக்கவும், அவர்கள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம். 1969 ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் Stonewall Inn என்ற இடத்தில் நிகழ்ந்த போராட்டம் நாளடைவில் உலகெங்கிலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளங்கள் கொண்ட மக்களின் மனித உரிமை இயக்கங்களாக உருவெடுத்தது. நங்கை (தன்பாலீர்ப்பு கொண்ட பெண்கள் ) ,நம்பி (தன்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள் ),ஈரர் (இருபாலீர்ப்பு கொண்டவர்கள்), திருநர் ( திருநங்கைகள், திருநம்பிகள் என்று அழைக்கப்படும் ஆண்பாலடையாளம் ஏற்கும் பெண்கள்) என்று வானவில்லின் வண்ணங்கள் போன்ற பல அடையாளங்கள் இவற்றுள் அடங்கும்.

பல ஒருங்கிணைந்த நிறுவனங்களும், குழுமங்களும், உள்ளூர் கூட்டமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களுக்கான கலை விழா, கவியரங்கம், கலந்துரையாடல், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, ஓவியப் போட்டி, பொன்மொழி மற்றும் கோஷப் போட்டி, அழகு போட்டி போன்ற பல குதூகலமுட்டும் பயனுள்ள நிகழ்சிகளை திட்டமிட்டுள்ளன.இதற்கெல்லாம் முத்தாயிர்பு வைத்தாற்போல அமையப்போவது – சென்னை நகரத்தின் வரலாற்றில் இரண்டாவது முறையாக மெரீனா கடற்கரையில் ஜூன் 27 ஆம் தேதி அரங்கேறப்போகும் வானவில் பேரணி. இந்த நிகழ்சிகள் பற்றிய விவரங்களை எங்கள் “நிகழ்ச்சிகள்” பககத்தில் காணலாம்.


குரல்கள்- கவிதை, பொன்மொழி மற்றும் கோஷ போட்டி

    நிராகரிக்க பட்டது போதும்! நிமிர்ந்து எழுங்கள்! குரல் கொடுங்கள்!

    சமூகத்தின் வெறுப்பிற்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து வெளிபடையாக வாழும் மாறுப்பட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவரானாலும் சரி, அல்லது அமைதியாக யாருக்கும் தெரியாமல் குரல் இல்லாமல் வாழ்பவரானாலும் சரி.. அல்லது மனிதத்தையும் மனித உரிமையையும் போற்றும் ஒரு நண்பராகவோ அல்லது உறவினாராக இருந்தாலும் சரி.

    எல்லோரும் பங்குகொள்ள கூடிய கவிதை, பொன்மொழி மற்றும் கோஷ போட்டி – “குரல்கள்”.

    உங்கள் படைப்புக்களை அனுப்பி இந்த வரலாற்று சிறப்பு மிக்க சென்னை வானவில் விழா 2010 தில் நீங்களும் பங்கு பெறலாம்.


“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” என்ற வள்ளுவரின் வாக்கியத்தை நாங்கள் இங்கு நினைவுகூர்கிறோம். ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய காதல், அன்பு மற்றும் அடையாளங்கள். இவைகள் சமூகத்தால், இயற்கைக்குப் புறம்பானவை என்றும் வெளிநாட்டு இறக்குமதிகள் என்றும் தூற்றப்படுகின்றன. ஆனால் இந்தக் காதல்களும் அடையாளங்களும் எங்களுக்கு இயற்கையானவை. நம்முடைய பண்பாட்டிலும் தொன்றுதொட்டு இருந்து வருபவை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால் எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி.

இந்த வானவில் விழாவில் -

- ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதிகள் ஏ. பி. ஷா மற்றும் எஸ் முரளீதர் அவர்கள் வழங்கிய இத்தீர்ப்பு எங்களது மாற்றுக் காதல்களைக் குற்றமற்றவை என்று அறிவித்தது. இதனைக் கொண்டாடுகிறோம்.

- மனித சம உரிமை பேணும் இந்தத் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் முழுவதுமாக நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் அனைவரும் சம உரிமைகளுடனும், மதிப்புடனும் வாழ்வதற்கு இது வழி செய்யும்.

- மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் மீது தொடர்ந்து நிகழ்ந்து வரும் வன்முறைகள் காரணமாக பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் ராமச்சந்திர சிராஸ் மற்றும் அவரைப் போன்ற எண்ணற்றோரை நாம் இழந்திருக்கிறோம். கல்வி நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும், காவல் துறையினரும், நீதித் துறையும், மத அமைப்புகளும், பொதுமக்களும் எங்கள் மீது தொடுக்கும் வன்முறை, ஒதுக்குதல் ஆகியவற்றிற்கு உடனடித் தீர்வு வேண்டும்.

- 2011 ஆம் ஆண்டு தேசிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள் கணக்கெடுப்பில் திருநங்கைகளும் ஆண் பாலடையாலம் ஏற்கும் பெண்களும்(திருநம்பிகள்), அவர்கள் தேர்வு செய்யும் பால்/ பாலின பிரிவினையைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். இப்பொழுதுள்ள “ஆண்/ பெண்” என்ற குறுகிய வரையறைக்குள் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

- எல்லோருக்கும் தேவையான முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒருவருடைய பாலீர்ப்பை மாற்றுவது என்ற பேரில் மருந்துகள் மூலமும், மின் அதிர்ச்சி சிக்கிசைகள் மூலமும் செய்யப்படும் கொடூர முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். அறிவியபூர்வமற்ற,ஆதாரபூர்வமற்ற இந்த முயற்சிகள் மருத்துவப் பணியின் நன்னெறிகளை அவமதிக்கும் செயல்பாடுகள் என்பது தவிர மனித உரிமை மீறல்களும் கூட.

-எங்களுடைய விழைவுகளை இயற்கையானவை என்று ஏற்றுக்கொள்ளும்படியும், எங்களது உடைகள் ,காதல், வாழ்க்கைத் துணை ஆகியவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை எங்களுக்கு அனுமதிக்குமாறு எங்களது குடும்பங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஆண்-பெண் திருமண உறவிற்குள் எங்களை வற்புறுத்தித் திணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

- எங்களது வாழ்க்கைகளையும் எங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுதும் நியாயமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் செயல்படும்படி ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எங்களைப் பற்றிய கற்பிதங்களையும் தவறான தகவல்களையும் தொடர்ந்து வெளியிடுவதையும் தவிர்க்கவும். எங்களையும் எங்களது பிரச்சனைகளையும் கொச்சைப்படுத்தும் விதங்களில் சித்தரிப்பதைத் தவிர்க்கவும்.

http://www.orinam.net/campaigns என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள கடிதங்களில் கையொப்பமிட்டு எங்களின் மனித உரிமைகளுக்கு உங்களது ஆதரவைத் தெரிவிக்கவும். நன்றி.

Search