மகாகவி சுப்ரமணிய பாரதியின் இந்த வார்த்தைகளால் வலிமையும் ஊக்கமும் பெற்று பாலுணர்வையும், பால் அடையாளங்களையும் கடந்து மனிதத்தை போற்ற 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சென்னை வானவில் கூட்டணி.
பால், பாலுணர்வு, சுற்றுப்புற சுழ்நிலை, பத்திரிகை, இளைஞர், கலாசாரம், ஹச்.ஐ.வீ/எய்ட்ஸ் இது போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருக்கும் பல ஒருங்கிணைக்கப்பட்ட , படாத உள்ளூர் கூட்டமைபுகளான மூவன்பிக் (எம்.பி), சகோதரி பௌண்டேஷுன் , சக்தி சென்டெர், சங்கமா, சகோதரன், அலையன்ஸ் பிரான்சிஸ் ஆப் சென்னை , சென்டெர் பார் கவுன்சிலிங், சென்டெர் பார் அட்வகசி அண்ட் ரிசர்ச், சவுத் இந்தியா பாசிடிவ் நெட்வொர்க், சவுத் இந்தியா எய்ட்ஸ் அக்ஷன் ப்ரோக்ராம், கார்பரேட் அக்கௌண்டபிளிட்டி டெஸ்க், சாலிடாரிட்டி அண்ட் அக்ஷன் அகைன்ச்ட் த எச்ஐவி இன்பக்ஷுன் இன் இந்தியா, யூத் பார் சோசியல் சேஞ்ச், நலம்தானா, லோட்டஸ் சங்கம், மற்றும் சோசியல் வெல்பர் பார் மென் ஆகிய அமைப்புகள் சென்னை பெருமை நிகழ்ச்சிகளை திட்டமிடுவதில் உதவின.
ஒரு மாதம் முழுக்க நடைபெற்ற பெருமை நிகழ்ச்சியில் சமூக கூட்டுவிவாதங்கள், பாரம்பரிய மற்றும் நவீன நடன நிகழ்ச்சிகள், மாறு பட்ட பால் உணர்வு கொண்டவர்களின் பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, பட திரையீடல்கள், மற்றும் இரண்டு பத்திரிகை கூட்டங்களும் இடம்பெற்றன. இதற்கெல்லாம் முத்தாயிர்பு வைத்தாற்போல அமைந்தது சென்னை நகரத்தின் வரலாற்றிலேயே முதல் முதலாக மெரீனா கடற்கரையில் அரங்கேறிய நிமிர்ந்த நன்னடை. 28 ஜூன் 2009 தில் நடந்த இந்த நிமிர்ந்த நன்னடை முடிந்து சில நாட்களிலேயே, ஜூலை 2 வது நாள் டில்லி உயர் நீதி மன்றம் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு” குற்றமல்ல என்ற தீர்ப்பை வழங்கி, மாறு பட்ட பால் உணர்வு கொண்ட எல்லோரையும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் ஆழ்த்தியது.
சென்னை பெருமை நிகழ்ச்சிகள் சமூகத்தில் நம்மை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் நமது குரல்களையும், கலாச்சாரத்தையும், போராட்டங்களையும் ஓங்கி ஒலிக்க செய்தது என்றால் அது மிகையாகது.
பெருமை நிகழ்ச்சிகளின் முழு விவரத்தை கிழே உள்ள சங்கிலியிலும் (ஆங்கிலத்தில்) , இது சமந்தப்பட்ட புகைபடங்களை இந்த திரையின் வலது புறத்திலும் காணலாம்.
மேலும் மீடியாவில் வெளி வந்த இந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை கிழே உள்ள சங்கிலியின் ஜூன் மற்றும் ஜூலை கோப்புகளில் காணலாம் (ஆங்கிலத்தில்) .
