pagetop

    மாறுபட்ட பாலுணர்வு உள்ளவர்கள் அதை அறிந்து  ஏற்றுக்கொள்வதையும் பின்பு தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கும் அதை தெரிவிப்பதையும் தான் வெளியே வருதல் என்று அழைக்கிறோம். மாறுபட்ட பாலுணர்வுள்ள முக்கால்வாசி பேர், எப்பொழுது மற்றவர்களுக்கு தங்களை பற்றி தெரிந்துவிடுமோ என்று பயந்து பயந்து வாழ்வதை விட்டு, உண்மையாக தாங்களாகவே  வாழ்வதற்காக இப்படி வெளியே வருகிறார்கள்.

    இந்திய மற்றும் ஆசிய சமுதாயத்தில் இருக்கும் பால் சம்மந்தப்பட்ட எதிர்பார்ப்புகளும்,ஆண்-பெண் திருமணத்திருக்கு தரப்படும் அளவற்ற முக்கியத்துவமும், குழந்தைப் பேறு பெற்று பரம்பரையை வாழையடி வாழையாக வளர்க்க வேண்டும் என்ற நிர்பந்தமும், இது போன்று மாறுபட்ட பாலுணர்வுள்ளவர்களின் மேல் ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் வெளியே  வருதலை மிகவும் கடினப்படுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் மற்ற சமூகங்களில்  இருந்தாலும், நம் சமூகத்தினர் இந்த பிரச்சனைகளை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்துகொள்வது நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கீழே காணப்படும் சங்கிலிகளில் மூவன்பிக் (எம்.பி) குழுவைச் சார்ந்த அங்கத்தினர்கள் தாங்கள் வெளியே வந்த கதைகளை பகிர்ந்துகொண்டிருப்பதை காணலாம். இந்த கதைகளை படிக்கும் பொழுது இப்படி வெளியே வரும் அனுபவங்கள் – பால், வயது, குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலைமை, அக்கம் பக்க சூழ்நிலை, குடியேரிய நிலை, இரண்டாம் தலைமுறை நிலை – என்று பல வகையரைகளை பொருத்து முற்றிலும் வேறுபடுவதையும் காணலாம்.

    இந்த கதைகள் உங்களுக்கு தெம்பும், துணிவும், ஊக்கமும் அளிக்கும் என்றும், நீங்கள் உங்கள் கதைகளையும் பகிர்ந்துகொள்ளவும் ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம். குறிப்பாக 377 சட்டம் நீக்கப்பட்டு பிறகு நடக்கிற இது போன்ற வெளியேவரும் அனுபவங்களை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறோம் .

    இந்த இணையத்தளம் (www.orinam.net) மாறுபட்ட பாலுணர்வுகொண்ட இந்தியர்களை, தங்கள்   வாழ்கையில் சந்திக்கும் சவால்கள், சங்கடங்கள், அனுபவங்கள் முக்கியமாக வெளியே வந்த கதைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறது. உங்கள் கதையை நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பினாலோ அல்லது இணையத்தில் இது போன்ற பயனுள்ள தகவல்களை எதிர்கொண்டாலோ தயவுசெய்து எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

    இந்த கதைகள் உரிமையாளர்களின் அனுமதியோடு இங்கு வெளியடபட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் உங்கள் இணையத்தளத்தில் எங்கள் சங்கிலிகளை சேர்த்துகொள்ளலாம். அனால் www.orinam.net டின் அனுமதியில்லாமல் தயவுசெய்து இவைகளை பிரதிஎடுத்து உங்கள் இணைய தளத்தில் வெளியிடவேண்டாம். உங்களது கேள்விகளையும் படைப்புக்களையும் orinamwebber@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


    த்ரிகொன் – தேஜஸ் கோப்புகளிலிருந்து சில வெளியே வரும் கதைகள் (ஆங்கிலத்தில் மட்டும்)

    மேலும் தகவல் அறிய த்ரிகொனின் 1997ஆம் ஆண்டு வெளியே வருதல் செய்திமலரை பார்க்கவும்.  மேலும் , சிங்கபூரை சேர்ந்த மாறுபட்ட பாலுணர்வு கொண்ட பெண்களின் சங்கமான சயோனி தனது ‘இண்டிக்நேஷன்’ பெருமை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வெளிவருதலை பற்றி ஒரு செய்திமலரை வெளியிட்டது. அதன் பி.டி.எப். நகலை இங்கே காணலாம் .

    Recent Posts