ஆண்-பெண் உறவுகளையும் திருமணத்தையும் முக்கியமாகக் கருதும் மற்றும் ஆண்மை பெண்மை என்று கடுமையான வரையறைகளை வலியுறுத்தும் இந்த சமூகத்தில் மாறுபட்ட பாலீர்ப்பு உள்ளவர்களாக வாழும் நம்மில் பலர் ஒதுக்கப்பட்ட சிறுபான்மையாக நம்மை உணர்கிறோம்.

    கீழ்கண்ட உண்மைகளை வலியுறுத்த, அறிவியல் ரீதியான அறிவுரை மற்றும் நம்மைப்போன்றவர்களின் சமூகத்திற்குள்ளே உதவி மிகவும் அவசியம்:

      * நாம் கெட்டவர்களோ, வழிதவறியவர்களோ, நோயாளிகளோ இல்லை.
      * நாம் வெறுக்கப்படவேண்டியவர்களோ,
      குணப்படுத்தப்படவேண்டியவர்களோ இல்லை
      * நாம் இரண்டாம் தர குடிமக்கள் இல்லை
      * நம் விருப்பம் போல் வாழவும், காதலிக்கவும் நமக்கு உரிமை உண்டு
      * நாமும் இந்த சமுகத்தின் மதிக்கபடவேண்டிய அங்கத்தினர்கள்
      * நம் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளை நம்மால்
      பூர்த்திசெய்யமுடிவதில்லை என்பதால் நாம் அவர்களை
      எதிர்க்கிறோம் , நிராகரிக்கிறோம் என்று அர்த்தமில்லை.

    குடும்பம் மற்றும் சமூகத்தில் நிராகரிக்கப்படுவது, எதிர் பாலின் மேல் ஈர்ப்பு இல்லை என்றாலும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்த படுவது, மனஅழுத்தம், தற்கொலைக்கான எண்ணம் – இவை எல்லாம் மாறுபட்ட பால் உணர்வுகொண்ட நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சில. இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தனியே இல்லை. உங்களை போன்ற பலரின் அமைப்புகள் இணையத்திலும், இணையமற்ற பல இடங்களிலும் இருக்கின்றன. அவர்களை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும் என்று  உங்களை உக்குவிக்கிறோம். ( இது போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள கே பாம்பே அமைப்பு வெளியிட்ட படைப்பை இங்கே காணலாம்)

    சென்னை – மூவன்பிக் (எம்.பி), சகோதரன்
    பாம்பே – கே பாம்பே, ஹும்சபர் டிரஸ்ட், எல்ஏபிஐஏ
    பெங்களூர் – குட் அஸ் யு , சங்கமா
    கேரளா-  சகாயத்ரிகா

    இந்த அமைப்புகளை பற்றி அறியவோ அல்லது உங்கள் அருகாமையில் உள்ள நண்பர்களிடம் பேசவோ orinamwebber@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.

    எந்த சூழ்நிலையிலும் தற்கொலை பற்றி எண்ணவேண்டாம் . நீங்கள் தனியே இல்லை.உங்களைப் போன்று பலர் இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து மீண்டு புத்துணர்ச்சியோடும், வலிமையோடும் வாழ்கிறார்கள். தேவைப்பட்டால் உங்கள் அருகாமையில் உள்ள தற்கொலை உதவி எண்ணை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்.

    நீங்கள் மாறுபட்ட பாலுணர்வு கொண்டவர்களின் பெற்றோராகவோ, குடும்பதினராகவோ, நண்பராகவோ இருந்தால் இந்த இணையத்தளத்தில் உள்ள பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் பக்கங்களை படிக்குமாறு கேட்கிறோம். மேலும் அமெரிக்காவை சேர்ந்த PFLAG அமைப்பின் பக்கத்தையும் பார்க்கவும். இது போன்ற அமைப்பு இந்தியாவில் இல்லை எனிலும், சில மாறுபட்ட பாலுனர்வுள்ள குழ்ந்தைகளின் பெற்றோர்கள் உங்களிடம் பேச முன்வரலாம். மேலும் விபரங்களுக்கு orinamwebber@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.

    தமிழ்நாடு
    சென்னையிலிருக்கும் “சென்டெர் பார் கவுன்சிலிங்”  மாறுபட்ட பாலுணர்வு கொண்டவர்களுக்கு தனிப்பட்ட மற்றும் கூட்டு கவுன்சிலிங் கூட்டங்களை நடத்துகிறது.
    இணையதளம்  :www.centerforcounselling.org
    போன்:+91-44-42080810 or +91-9884700174

    கேரளா
    சகாயத்ரிகா – தன் பால் ஈர்ப்புள்ள, இருபால் ஈர்ப்புள்ள பெண்களுக்கும், திருநங்கையர்களுக்குமான உதவிஎண்.
    நேரம்: வியாழன், வெள்ளி, சனி 4 pm – 7 pm
    ஈ மெயில் :sahayatrika@gmail.com
    போன்:+91-9744955866

    கர்நாடகா
    லேஸ்பிஇட் , பெங்களூர் – தன் பால் ஈர்ப்புள்ள, இருபால் ஈர்ப்புள்ள பெண்களுக்கும், திருநங்கையர்களுக்குமான உதவிஎண்.
    நேரம்:  சனி 11.30 a.m. to 3 p.m ,ஞாயிறு 11.30 a.m. to 6 p.m
    போன்:+91-80-23439124.

    சகாயா உதவிஎண், பெங்களூர்
    நேரம்:  செவ்வாய்,ஞாயிறு இரவு 7p.m to 9.00p.m
    ஈ மெயில் :sahayabangalore@hotmail.com
    போன்:+91-80-223 0959

    சங்கமா, பெங்களூர்
    மாறு பட்ட பாலுணர்வு கொண்ட சிறுபான்மையினருக்காக இயங்கும் லாபமற்ற அமைப்பு
    போன்:9945601651/52 9945601653/54 9945231493

    மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா
    சாத்தி மாறு பட்ட பாலுணர்வு கொண்டவர்களுக்கான உதவி எண். பால் சம்மந்தப்பட்ட உடல் ஆரோகியதிற்கான உதவி.
    ஈ மெயில் :saathiihelpline@rediffmail.com
    கொல்கத்தா- நேரம்: திங்கள், புதன், வெள்ளி 12-5 pm
    போன்:033 2484 4841
    புவனேஸ்வர்- நேரம்: திங்கள், புதன், வெள்ளி 12-5 pm
    போன்:0674 657 1222

    புதுதில்லி
    சங்கினி – தன் பால் ஈர்ப்புள்ள, இருபால் ஈர்ப்புள்ள பெண்களுக்கும், திருநங்கையர்களுக்குமான உதவிஎண்.
    நேரம்: செவ்வாய் 12 pm to 3pm ,  வெள்ளி  6pm to 8pm.
    போன்:011-55676450

    Recent Posts