எங்கள் குரல் ஓரினம் வலைப்பதிவு

ஆசிரியப்பா: போற்றிடுவோமே!

காதற் கதிரவன் ஆயிரம் கரங்கள்
நீட்டியே அன்போ டழைத்தும் அடைந்திட
இயலா நிலையில் ஏங்கிய புவிமகன்
தானும் பசலை படர பற்பல
கரங்கள் நீட்டினான் அவைதாம்
மரங்கள் அவற்றை போற்றிடுவோமே!

(பசலை: பிரிவாற்றாமையால் மேனி பசப்பு/பச்சை நிறம் அடைதல்)

ஆசிரியப்பா: ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதி உண்டு.

விமர்சனம்

6 விமர்சனங்கள். உங்களுடைய விமர்சனத்தை சேர்க்கவும் »

விமர்சன கோட்பாடுகள்: உங்கள் விமர்சனம் பரிசீலனைக்கு பிறகு பிரசூரிக்கப்படும். தகாத வார்த்தைகள் இருந்தால் விமர்சனம் நிராகரிக்கப்படும். இணைய சங்கிலிகளை இணைப்பதோ, அடுத்தவர் கருத்துக்களை வெட்டி ஓட்டுவதோ வேண்டாம். விமர்சனங்கள் வாசகர்களுடையது, ஓரினம் பொறுப்பேற்க்க முடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் விமர்சனத்தை நீக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

  1. Wow! This is so beautiful Ravi. Love the way you have queered nature. Your Tamil is very rich and scholarly. Looking forward to read more of your poems.

  2. கவிஞரே,

    ஆரியப்பாவின் யாப்பு சரிதான். ஆனால் எதுகை மோனை குறிப்பாக பொழிப்பு மோனை வருதல் சிறப்பு என்பதில் சிறிது கவனம் செலுத்தலாமே! நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *