பற்றி

ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.

 • இந்த தளத்தில் காணப்படும் அனைத்து படைப்புகளின் காப்புரிமை படைப்பாளிகளுடையது.
 • வளங்கள் பகுதியில் உள்ள படைப்புகளின் காப்புரிமை ஓரினம்.நெட்’டின்னுடையது.
 • வலைப்பதிவு பகுதியில் உள்ள படைப்புகளின் காப்புரிமை படைப்பாளிகளுடையது
 • பிறர் மூலம் உருவாக்கப்பட்ட படைப்புகள் அவர்கள் அனுமதியுடன் இங்கே பயபடுத்தப்பட்டுள்ளது.
 • எல்லா மூலங்களையும் முறையே நாங்கள் பட்டியலிட்டிருக்கிறோம். உங்களுக்கு இதில் ஏதாவது குறைபாடு தெரிந்தால் தயவுசெய்து எங்களது கவனத்திற்கு கொண்டு வரவும். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

படைப்புகளை பகிர:

 • நீங்கள் எங்கள் பக்க இணைப்பு சங்கிலிகளை உங்கள் தளத்தில் இணைத்துக் கொள்ளலாம்.
 • எங்கள் படைப்புக்களை பகரிந்து கொள்ள விரும்பினால், 50 வார்த்தைக்கு மிகாமல் ஒரு சாராம்சமும், பக்க இணைப்பு சங்கிலியையும் உங்கள் தளத்தில் பிரசூரிக்கலாம். ஓரினம்.நெட்டின் முழு படைப்பை உங்கள் தளத்தில் வெட்டி, ஓட்டக் கூடாது.
 • அப்படி 50 வார்த்தைக்கு மீறிய சாரம்சமோ, அல்லது முழு படைப்பையோ உபயோகிக்க விரும்பினால், எங்களிடமிருந்தும், எழுத்தாளரிடமிருந்தும் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும். எழுத்தாளரிடமோ அல்லது ஓரினம்.நெட் தளத்திடமோ மட்டும் அனுமதி பெற்றால் போதாது. இருவரது அனுமதியும் அவசியம்.
 • அனுமதிக்கு எங்களை தொடர்பு படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளவும்.
 • அனுமதி கிடைத்த பிறகு, உங்களது தளத்தில், பிரசூரத்துடன் ஓரினம்.நெட்டில் வெளியான படைப்பின் சங்கிலியும் பிரசூரிக்கப்பட வேண்டும். வெறும் ஓரினம்.நெட் முகப்பு முகவரி மட்டும் போதாது.
 • அத்துடன் கீழ்கண்ட ஓரினம்.நெட் சுருக்கமும் பிரசூரிக்கப்பட வேண்டும்.

ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால்அடையாளம் பற்றிய தகவல்தளம். நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்று நம்மில் அனைவரது தளம் இது. நமது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோருக்கும் இதில் இடம் உண்டு. கல்வி நிலையங்கள், பணியிடம், சமயம் மற்றும் ஆன்மிகம், சட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு, ஊடகங்கள், மருத்துவ பணியாளர்கள் என்று எல்லோருக்கும் பயனளிக்கும் தகவல் வளங்களை இந்த தளத்தில் நீங்கள் காணலாம். எங்கள் குரல் – ஓரினம்.நெட்டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை, மற்றும் பல படைப்புகளை காணலாம்.

This post is also available in: English