இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம் திருனர் சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள்.
அந்நியர்களை கூட அன்புடன் அரவணைக்கும் தேசம் நம் தேசம். அப்படிப்பட்ட நாம், நம் தசை, நம் ரத்தத்தில் நம்மோடு ஒருவராகப் பிறந்த குழந்தை திருனர்தன்மை கொண்டதாக இருந்தால் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்? திருனர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். திருனர்களுக்கு சட்டரீதியான, சமூகரீதியான, மருத்துவரீதியான பாதுகாப்பளிக்க வழிசெய்வோம்.
இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
வாரமலர் இணையதளத்தில் 12 ஜூன் 2009 அன்று வெளியான “அன்புடன் அந்தரங்கம்” பகுதியில் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஒருபாலீர்ப்பை பற்றி எழுதிய கருத்துளை கண்டித்து ஒரு கடிதம்.