நிகழ்ச்சிகள்

சென்னை மற்றும் தமிழ் நாட்டில் ஓரினம் தனியாக அல்லது கூட்டாக நடத்தும் நிகழ்ச்சிகளின் விவரம் இங்கே வழங்கப்படும். உங்களுடைய நிகழ்ச்சிகளை பட்டியலிட எங்களை தொடர்பு கொள்ளவும்.

ஓரினம் குழுமத்தில் QUiLT (Queer(ing) Literature) – மாற்று இலக்கியம் – என்னும் புத்தக சங்கத்தின் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்திவருகிறோம்.

ரீல் டிசயர்ஸ்: சென்னை சர்வதேச பாலின-பாலீர்ப்பு திரைப்பட விழா – மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து ஒவ்வொரு வருடம் ஜூலை மாதத்தில் நடத்தப்படுகிறது.

வழக்கமான நிகழ்வுகளைத் தவிர, சமூக சந்திப்பு மற்றும் பிற நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. சென்னை வானவில்-சுயமரியாதை விழா, மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து ஒவ்வொரு வருடம் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. வானவில்-சுயமரியாதை மாதத்தின் பகுதியாக, வண்ணங்கள் என்னும் கலாச்சார நிகழ்வும் நடத்தப்படுகிறது. நீங்கள் சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் நபர் என்றால் எங்களுடைய நிகழ்வுகளில் தயக்கமில்லாமல் பங்கு பெற அழைக்கிறோம். தயக்கமாக இருத்தால் எங்களை அணுகவும்.

<< >> September 2020
MonTueWedThuFriSatSun
31123456
78910111213
14151617181920
21222324252627
2829301234

This post is also available in: English