Our Voices The Orinam Blog

வாழ்க்கை வாழ்வதற்கே! – சரவ் சிதம்பரம்

கோயம்பத்தூரில் பிறந்து, இன்று அமெரிக்காவில் வசிக்கும் திரு.சரவ் சிதம்பரம், இந்த வீடியோவில் தனது வாழ்க்கை பயணத்தை பற்றி பேசுகிறார். சிறுவயதிலிருந்தே தான் வித்தியாசமானவன் என்று உணர்ந்தாலும், அதை புரிந்து கொள்ளமுடியாமல் அவர் பட்ட கஷ்டங்களையும், அதை எப்படி அவர் போராடி ஜெயித்தார் என்பதையும் மனம்திறந்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார் சரவ்.

சரவ் இன்று அமெரிக்காவில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் சமூகத்தின் மத்தியில் மிகவும் மரியாதையும், மதிப்பும் பெற்றவர். அவர்களின் உரிமைகளுக்காக அயாராது உழைத்துக் கொண்டிருப்பவர். கனிப்பொறி வல்லுனராக பணிபுரியும் சரவ், நாட்டிய தேர்ச்சி பெற்றவர். ஒடிசி, மற்றும் பரதநாட்டிய கலைஞர். திரைப்பட இயக்குனர். மனித உரிமை போராளி.

ஓரினம்.நெட் பெரும் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் உங்களுக்கு இந்த வீடியோவை வழங்குகிறது. இந்த வீடியோ நமது சமூகத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையும் என்று நம்புகிறோம்.

This post is also available in: English

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *