நமக்காக, நம்மால் உருவாக்கப்பட்ட வளங்கள் இவை
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் உள்ளவர்கள் அதை அறிந்து, ஏற்றுக்கொள்வதையும் பின்பு தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கும் அதை தெரிவிப்பதையும் தான் வெளியே வருதல் என்று அழைக்கிறோம். மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்ட முக்கால்வாசி பேர், எப்பொழுது மற்றவர்களுக்கு தங்களை பற்றி தெரிந்துவிடுமோ என்று பயந்து, பயந்து வாழ்வதை விட்டு, உண்மையாக தாங்களாகவே வாழ்வதற்காக இப்படி வெளியே வருகிறார்கள்.
இந்திய மற்றும் ஆசிய சமுதாயத்தில் இருக்கும் பால் சம்மந்தப்பட்ட எதிர்பார்ப்புகளும், ஆண்-பெண் திருமணத்திருக்கு தரப்படும் அளவற்ற முக்கியத்துவமும், குழந்தைப் பேறு பெற்று பரம்பரையை வாழையடி வாழையாக வளர்க்க வேண்டும் என்ற நிர்பந்தமும், இது போன்று மாறுபட்ட மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் உள்ளவர்களின் மேல் ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் வெளியே வருதலை மிகவும் கடினப்படுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் மற்ற சமூகங்களில் இருந்தாலும், நம் சமூகத்தினர் இந்த பிரச்சனைகளை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்துகொள்வது நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்காக சில “வெளியே வரும் கதைகள்” பக்கத்தில்.
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்
This post is also available in: English