மே 2008, இந்தியாவை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பாளர்கள் மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் ( LGBT – Lesbian, Gay, Bisexual, Transgenders ) வரலாற்றில் ஒரு கருப்பு மாதம். கிறிஸ்டி மற்றும் ருக்மணி என்ற இரு பெண்கள் தங்கள் காதலை அங்கீகாரம் செய்யாத, அவர்களை ஒன்று சேர விடாத சமூகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் தீக்கிரையாகி தற்கொலை செய்துகொண்ட மாதம். இந்நிகழ்ச்சி மாறுபட்ட பாலீர்ப்பாளர்கள் மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் இது போல உயிர்கள் போகாமல் இருக்க ஏதாவது செய்யவேண்டும் என்ற முயற்சியில் சக்தி மையம் என்ற நிறுவனத்தின் தலைமையில் மற்றும் பல பேர்களின் முயற்சியால் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பெண்களுக்கான தொலைபேசி மூலம் உதவி போன்றவற்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.


எழுத்தாளார் ஸ்ரீதர் சதாசிவன் தனது சிறுகதையை கிறிஸ்டி, ருக்மணிக்கு அர்ப்பணிக்கிறார்
“கருகிய காதல் மலர்களுக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி ” – ஸ்ரீதர் சதாசிவனின் அத்தை

This post is also available in: English