Our Voices The Orinam Blog

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து

maadhorubaagan

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான மாதொருபாகன் (காலச்சுவடு வெளியீடு, நான்கு பதிப்புகள்) என்ற நாவல் தடை செய்ய நடக்கும் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து ஓரினம் சார்பாக எங்கள் குரலை பதிவு செய்கிறோம். ஒரு சில அடிப்படைவாத வலது சாரி இந்துதுவ கட்சிகள், மற்றும் சில சாதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு இப்பிரதி இலக்காகி உள்ளது. புத்தகத்தை தடை செய்ய கோருவதும், எழுத்தாளரை கைது செய்ய கோருவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்துள்ள கருத்துரிமைக்கு முற்றிலும் முரண்படுவதாக உள்ளது.

சிவனின் ஆண்பெண் வடிவமாகிய அர்த்தநாரி ஈஸ்வரனின் தமிழ் பெயரை தலைப்பாக கொண்ட இந்த புத்தகம் கொங்கு தமிழ் நாட்டின் மையப்பகுதியான திருஞ்சங்கோடு நகரத்தையும், அதன் கோவில் திருவிழா தொடர்புடைய வழக்கங்கள் என்று சிலரால் கருதப்படும் விடயங்களையும் குறித்து பேசுகிறது.

எனினும் இந்த புத்தகத்தின் சாரம் இதுமட்டுமல்ல என்பதை அறிகிறோம். இந்த புனைவில் ஆண்மை, பெண்மை மீது உள்ள வழக்கமான கருத்துகளுக்கு வேறொரு பரிமாணத்தை தந்துள்ளார் ஆசிரியர். குழந்தை இல்லாத அன்பான தம்பதியர்களான காளி மற்றும் பொன்னா பற்றியது இதன் முழு கதையும். முதன்மை ஆண் பாத்திரமான காளி மீது கட்டமைக்கப்பட்ட ஆண்மை கருத்தியல் எல்லா விதத்திலும் தோல்வி அடைகிறது. முதன்மை பெண் கதாபாத்திரமான பொன்னா குழந்தை பெறுவதற்காக முகமற்ற உடலுறவு சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் பெண்களுக்கான பாலியல் மரபுகளை கடந்து செல்கிறார்; அந்த இரவில் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதை தான் தேர்ந்து கொள்ளலாம் என்றதையும், தன் விருபதிற்கு இணங்க இருக்கும் ஒரு அழகான கடவுளுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்பதிலும் தெளிவான சிந்தனையுடன் திகழ்கிறாள். மேலும் இந்த புத்தகம் பொது புத்தியில் புரியபட்டுள்ள தெய்வீக தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. கடவுள் என்று வரும் போது பெண் ஒருத்தி பகுத்தறியவும், ஒரு முடிவு எடுத்த பிறகு அதில் நிலையாக நிற்க முடியும் என்பதையும், சாதியற்ற அன்பின் உருவாய் மட்டும் திகழ்கிறான்/திகழ்கிறாள் என்பதையும் அழகாக உணர்த்துவதாக இருக்கிறது. இவ்வாறே தெய்வீகத்தின் தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. ‘கடவுள் தந்த குழந்தை’ என்று நாம் கேட்ட வாக்கியம் உண்மையில் எதை குறிக்கிறது என்பதை மறுசிந்தனைக்கு உட்படுத்துகிறது.

பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் மாற்று பாலியல்களையும், பால் அடையாளங்களையும் எதிர்க்கும், ஆணாதிக்க அடையாளத்தை கடை பிடித்து பெண்களை ஒடுக்க நினைக்கும் அதே எச்சரிக்கைவாதிகள் தான் இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த கதையில் வரும் திருச்செங்கோடு நகரின் பெயரை இனிவரும் பதிப்புகளில் இருந்து நீக்க எழுத்தாளர் முடிவு செய்துள்ளார் என்ற போதிலும் இந்த நாவலை தடை செய்வதே இவர்களின் நோக்கம். மாற்று பாலினத்தரை ஒழிப்பதும், ஆணாதிக்க அடையாளத்தையும், விதிமுறைகளை வலுப்படுத்துவதையும் எதிர்த்து போராடும் ஒரு முற்போக்கு அமைப்பாக செயல்படும் ஓரினம் பாலினம் அல்லது இலக்கியம் எதுவாக இருப்பினும் ஒடுக்கப்படுபவர்கள் பக்கமே என்றும் நிற்கும். ஓரினம் – எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

சமீபத்தில் பெருமாள் முருகன் தன் படைப்புகளை திரும்பி பெற்றுக்கொண்டார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த முடிவை அவர் மீண்டும் பரீசீலனை செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தாலும், அவர் சந்தித்த போராட்டங்களை எதிர்த்த முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம், மேலும் நீண்ட் சுயபரிசோதனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும் இந்த புத்தகம் எப்போதும் வாழும் என்பதை நாங்கள் குறிப்பிடுகிறோம் – அவர் படைப்புகளின் பிரதிகள் எங்கள் நூலகங்களில் உள்ளன. அதை நாங்கள் தீயிட மாட்டோம். இந்த படைப்புகள் இனி நாங்கள் நடத்தும் விழாக்களிலும் பங்குபெறும் விழாக்களிலும் தனி இடத்திலும் பொது வெளியிலும் வாசிக்கப்பட்டும், விவாதிக்கபடும்.

 

This post is also available in: English

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *