Similar Posts

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 Comments

  1. MY stoy;
    பல தனிப்பிறவிகளைப்போலத்தான் எனக்கும்: வெளியில் விளையாடுவதில், காத்தாடி விடுவதில் நாட்டம் இருந்ததே இல்லை. நடனம், வண்ணவண்ண உடைகள், மலர்கள், தீபங்கள், சமையலறை வேலைகள் என்றால் பிரியம் அதிகம்! பிறகு இவை ஒவ்வொன்றிலிருந்தும், விரட்டி விலக்கப் பட்ட கதை தனி! எனக்கு ஒவ்வாதவை: கிரிக்கெட் பார்ப்பது, புகை, மது, வாகனங்கள் ஓட்டுவது, கெட்ட வார்த்தை உதிர்ப்பது. அதேபோல், சம வயசுக்காரர்களிடையே பெண்கள், காமம், பற்றியெல்லாம் பேச்சு வந்தால், எனக்குப் பேச தோதான விஷயம் இருக்காது! அதனால் வாய் மௌனமாகி விடும். அல்லது கால் காது கேட்காத தூரத்துக்கு ஓடி ஓளியச் சொல்லும்.

    என் சுபமான ஆரம்பம்:
    வகுப்பு 4-சி: “ஒழுங்குப் புள்ள” என்ற சான்றிதழ் எனக்கு! வகுப்பு டீச்சர் பெண் மாணவிகளையும, கூடவே பரிதாபப்பட்டு என்னையும் உட்காரவைத்துவிட்டு, ஆண் நண்பர்களுக்கு தண்டனை தந்தார். அவருக்கு அது நியாயமாகத் தோன்றியிருக்கலாம்!

    நடனப் பயிற்சியின்போது டீச்சர்கள் கவனித்துக் கேட்டார்கள். ” உன் இடுப்பு என்னப்பா இப்படி வளையுது?” ஆச்சரியம் அவர்களுக்கு. பெருமை எனக்கு!
    கூடவே திருப்பாவை போட்டியில் முதல் பரிசு! நகைச்சுவை கதா காலட்சேபம் ஒன்றுக்கு மேடை ஏற்றினார்கள். வள்ளி முருகனை வெட்கத்துடன் பார்த்து மாலையிடும் காட்சியில், ” என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ – பாட்டு பாடியபடி வகுப்பு நண்பனின் தோளில் மாலையிடும் பாவனையில் நடிக்கவேண்டியிருந்தது. அதற்கு ஒரு மாசம் பயிற்சி. தினமும் அதே நண்பன், பாடல், வெட்கம், காற்றில் மாலையிடும் பாவனை.. என்ன ஒரு அனுபவம் பாருங்கள்! அந்தக் கற்பனையில் லயித்ததால்தானோ என்னவோ எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது – பூ மாலைகளை!!! நிஜத்தில்தான் மாலை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வராமலே போய்விட்டது! அது போனால் போகிறது. பின்னாளில் கோவில் ஊர்களுக்குப் போகும்போது, மாலைக்கடையில், மனசுக்குப் பிடித்த மாலை ஒன்றை வாங்கி கோவிலுக்குள் எடுத்துப்போவேன். பிறகு அதை நானே மாட்டிக்கொண்டு திரிவேன் – வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் செய்வதுபோல!. இதுபோல எனக்கு வாய்த்த அல்ப சந்தோஷங்கள்தான் எத்தனை!

    அந்த சம்பவங்களுக்குப் பிறகு எனக்கு அடித்தது ‘கேலி’ யோகம். அவ்வப்போது நடந்த சம்பவங்கள், ” நீ வித்தியாசப்பட்டவன்” என்று எனக்கு அழுத்தம் திருத்தமாக நிரூபித்துக்கொண்டே வந்தன. அவற்றில் சில இதோ இங்கே:
    1. தெருவில் நடக்கும்போது பின் வந்த மாமா ஒருவர், ” டேய் நீ நேரா நடடா. இல்லேன்னா உன்னை பொம்பிளைப் பையன்னு கிண்டல் பண்ணுவாங்க” என்றார். அவருக்கு என்ன தெரியும், என்னை ஏற்கனவே கிண்டல் மழையில் கூடப் படிக்கிறவர்கள் நனைத்து வருவதை! அதே போல, என் கையிலிருந்த கறையை நீக்க முயன்ற என் மாமி சொன்னார், ” இவன் கை ரொம்பவும் மென்மையாக இருக்கு” என.
    2. Classmates started walking beside me mimicking my walk, peppering it up with clapping and singing catchy movie song lyrics describing walk or movement!
    2. பையன்களில் சிலபேர் என் நடையை நையாண்டியாய் “மிமிக்’ செய்தபடி கூடவே பொருத்தமாக சினிமா பாட்டுக்கள் பாடி வருவார்கள். இப்பவும் ஞாபகம் வருபவை: நடையா இது நடையா, நடைய மாத்து, மெல்ல நட மெல்ல நட.. இப்படிச் சில பழைய பாட்டுக்கள் என்னைப் பாடு படவைக்கும்!

    3. Got called by different female nick names, including one that tweaked the spelling of my name!

    3. எனக்கு சில பெண் பெயர்களை ‘நிக் நேம்’ வைத்துக் கூப்பிடுவார்கள்.
    4. சினிமா ஹீரோவாகவோ, வில்ல்னாகவோ தன்னைக் கற்பிதம் செய்யும் சிறுவர்கள் என்னை அபலைக் கதா நாயகியாக நினைத்து, ஸ்டைலாகவோ, முரட்டுத்தனமாகவோ என் உடம்பைக் கையாள்வார்கள்!
    5. பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கு வந்த என் அக்காவிடம் பாசத்துடன் ஓடிய என்னைப்பார்த்துச் சொன்னார்: ” நீ ஓடி வரும் ஒயிலைப் பார்த்தால் உன்னைப் பளார் என்று அறையணும்னு தோணுது”.

    6. ” ஏய் இவனைத் தொட்ட்டுப் பாரேன். கூசுதுடா” – இது ஒரு வகுப்பில் வெளியான அறிவிப்பு! தொடர்ந்து ஒவ்வொருவராய் வந்து என்னைப் பிடித்து தடவி.. எனக்கு அழுவதா, சிரிப்பதா தெரியாத நிலை!

    7. இரண்டு மாணவர்கள் தினமும் என் பாவனைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என மிரட்டியதுடன், அப்படி செய்ய முடியாத நிலையில், தினமும் அவர்கள் என்னை அடிப்பார்கள் – இது தொடர்ந்தது – ஒரு நாள் மனம் உடைந்துபோய் அழுது புலம்பிய பின்!

    8. அவன் என் டெஸ்கில் உட்க்காரும் சக மாணவன் அவன். பெஞ்ச்சில் நெருக்குதல் அதிகம் இடப் பற்றாக்குறையால்! அதில் ஒருவன், என்னை ரோமாண்டிக் லுக்குடன் பார்த்திருப்பான். என்னை ஏதாவது ஒருவிதத்தில் தீண்டுவான். காதில் கிசுகிசுப்பாய் ஏதேதோ சொல்லுவான். முதலில் புரியாத மக்கு எனவும், பின்பு அதிர்ந்தும், அதுக்கு அப்புரம் குறுகுறுப்புடனும், எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் அவன் எனக்குக் கொடுத்த முக்கியத்துவத்திலும், கவனத்தையும் ரசிக்கத் தொடங்கியபோது, மீண்டும் பெருமையாக இருந்தது. ஆனால் அவன் கோபப்பட்டான் என்மீது! ” ச்சீய்! நான் தான் இப்படி செய்யுறேன்னா, உனக்கு எங்க போச்சு புத்தி’ என்றதுடன், என்னுடன் பேசுவதையே குறைத்துக்கொண்டான். சும்மா கிடந்த சங்காக இருந்த என்னைத் தூண்டிவிட்டுப் பின் தட்டி விட்டுப் போனான். நான் குழப்பமடையத் தொடங்க்கினேன்! அதுக்கு அப்புரம், யார் நெருக்கம் காட்டினாலும், என் அறிவு சந்தேகப் படவைத்தது! யாரையும் கிட்டே சேர்க்கவில்லை!

    9. என் உறவுப் பெண் ஒருவர் சொன்னார், நீ ஏன் உன்னைப் போல இருப்பவர்கள் தங்கியிருக்கும் குடிசைகளுக்குப் போகக்கூடாது!” என்று. ஆட்டோக்காரர்களுக்கு என் வித்தியாச நிலை காரணமாக, நான் கைராசிமிக்க வாடிக்கையாளன் ஆகிவிட்டேன்.

    10. A male teacher sent shivers down my spine when he subjected to me a sudden ‘unwanted bad touch’ and kiss!
    10. ஆண் ஆசிரியர் ஒருவர் பள்ளிப் பருவத்திலிருந்த என்மூலம், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முயன்றார். அவரது பாலியல் தீண்டல் முயற்சிகள் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதைப் பற்றி அம்மாவிடம் பேச முடிந்தது!

    கல்விப் பயணம் போயிருந்த இடத்தில் இரவில் நல்ல தூக்கத்திலிருந்து திடீரென விழிப்புணர்வு பெறுகிறேன். வகுப்புத் தோழனின் கரங்கள் என் மீது உலவுவதை உணர்கிறேன். கையை விலக்கிவிட்டுத் தூங்கிவிடுகிறேன் – அவனது நண்பர்கள் கையில் கேமராவுடன் காத்திருந்ததை உணராமல்.

    மேற்படி மனிதர்கள் கடந்து போய்விட்டார்கள், என்னுள் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு! நான் என் இயல்புடன் நிரந்தரமாக! என்றும் தனியாக! ஆனால் தனிமையால் பாதிக்கப்படாமல்!
    இந்தப் பட்டியல் இன்னும் முடிந்துவிடவில்லை! எப்போது முடியும் என்பதும் தெரியவில்லை! சமீபத்தில் முக்கிய சாலை ஒன்றில் ஒரு வாலிபக்கும்பல், என்னைப் பார்த்ததும், பகடியாக ஒலியெழுப்பியபடி உரக்க சிரித்தார்கள். திகைத்த நான், மறுகணம் நேராக போய், அவர்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். “இப்ப என்னா? நான் எதுக்கும் தயார்” என்பது போல. அவர்கள் உடனே அமைதியாகிவிட்டார்கள்! எனக்கு என்னையே அன்றுதான் ரொம்ப பிடித்த்தது!

    1. @Shankar: மனது கடந்து வந்த வேதனைகள் எழுத்து உருவம் பெற்றுள்ளது! நம்மையே நமக்கு பிடிக்கும் தருணங்களில் தான் நம்மை மற்றவர்களுக்கு உணர்த்த இயலும். உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் சங்கர்!