பால்/Sex
இது பிறப்பில் தோன்றிய உடற்கூறு சார்ந்த வேறுபாடு
Sex: refers to the biological make-up of a person. Most people are either male or female, and a few have biological features of both sexes. These are referred to as inter-sexed (formerly hermaphrodites). The biological make-up is assessed from external body parts, sex chromosomes and/or tissues and organs.
பாலினம்/Gender
ஆண் தன்மை அல்லது பெண் தன்மை. பாலினம் என்பது ஒருவர் தன்னை அடையாளம் காண உபயோகிக்கும் சொல். உதாரணம்: சமூகம் ‘வலிமை’, ‘வீரம்’ போன்றவற்றை ஆண்தன்மையோடு இணைக்கிறது. ‘மென்மை’ போன்றவற்றை பெண்தன்மையோடு இணைக்கிறது.
Gender: This refers to the social categories of man and woman, and to the behaviors that we consider to be masculine and feminine. Gender is expected to conform to biological sex. Hence, someone whose sex is male, is expected to look like a man and behave in a masculine manner. What constitutes “masculine behavior” or “manly appearance” may vary culturally, and may vary across history, but some features are constant. Males who do not conform to the expectations society has of men, and females who do not conform to the expectations society has of women, are considered inferior or inadequate, and can be subjected to ridicule and harassment. Such ridicule and harassment is especially severe for those whose are transgender, i.e. those whose gender is at odds with their sex.
பால் ஈர்ப்பு/Sexual Attraction or Sexuality
இது பாலியல் ரீதியாக ஏற்படும் ஈர்ப்பு.
This refers to an individual’s attraction to men, women, and/or transgender people.
பாலுறவு நடத்தை/Sexual Behavior
நடைமுறையில் ஒருவர் யாருடன் பாலுறவு கொள்கிறார்கள். அதாவது ஆண் மற்றும்/அல்லது பெண், அறவாணிகளூடன்
This refers to an individual’s sexual behavior with men, women, and/or transgender people.
பாலுறவு அடையாளம்/Sexual identity
ஒருவர் தம்மை எப்படி அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். உதாரணம்: கோதி, DD, அறவாணி..
Sexual identity refers to how individuals identify themselves. Terms such as Gay, Bi, Kothi, Double Decker, Aravani, and Straight all connote sexual identity.
எதிர்பாலீர்ப்பு/Heterosexuality
எதிர் பால் மேல் ஏற்படும் பாலீர்ப்பு.
பெண்கள் மேல் பாலீர்ப்பு உடைய ஆண்கள், ஆண்கள் மேல் பாலீர்ப்பு உடைய பெண்கள் (எதிர்பாலீர்ப்பாளர்)
Heterosexuality refers to Opposite-sex attraction.
ஒருபால்ஈர்ப்பு or தன்பாலீர்ப்பு/Homosexuality
தன் பால் மேல் ஏற்படும் பாலீர்ப்பு.
ஆண்கள் மேல் பாலீர்ப்பு உடைய ஆண்கள், பெண்கள் மேல் பாலீர்ப்பு உடைய பெண்கள் (தன்பாலீர்ப்பாளர்)
Homosexuality refers to same-sex attraction.
நம்பி/Gay
தன் பால் ஈர்ப்புள்ள ஆண்.
ஆண்கள் மேல் பாலீர்ப்பு உடைய ஆண்கள்.
Men with same sex attraction
Men who love men
நங்கை/Lesbian
தன் பால் ஈர்ப்புள்ள பெண்.
பெண்கள் மேல் பாலீர்ப்பு உடைய பெண்கள்.
Women with same sex attraction
Women who love women
இருபாலீர்ப்பு/Bisexuality
ஆண்/பெண் இருவர் மேலும் ஏற்படும் பாலீர்ப்பு
ஆண்/பெண் இருவர் மேலும் பாலீர்ப்பு உடைய ஆண்கள் மற்றும் பெண்கள்(இருபாலீர்ப்பாளர்கள்)
Bisexuality refers to attraction towards males and females.
ஈரர்/Bisexuals
இரு பால் மீதும் ஈர்ப்புள்ள ஆண்கள் அல்லது பெண்கள்.
ஆண்/பெண் மீது ஈர்ப்புள்ள ஆண்
ஆண்/பெண் மீது ஈர்ப்புள்ள பெண்
Men & Women who has attraction towards both the sex
Men who love both men & women
Women who love both men & women
திருநர்/Transgender
தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். உதாரணம் : தான் பெண் என்று மன அளவில் நம்பும் ஆண்கள் இது சில சமயம் ட்ரான்ஸெக்சுவல் என்பதையும் சேர்த்துச் சொல்லும் கூட்டுச்சொல்லாகவும் பயன்படுகிறது.
Transgender refers to individuals whose sense of their own gender differs from their biological sex.. For example, it could refer to individuals born biological male, who think of themselves as women, or to individuals born biologically female, who think of themselves as men.
திருநங்கை/Male To Female Transgender(MTF)
பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாடை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். திருநரில் ஒரு பிரிவு.
This term refers to individuals who consider themselves as Women , but born as Men. These individuals have opted out of their biological sex, or plan to opt, through sex-reassignment surgery. This is to align their external sexual characteristics with their mental sex.
திருநம்பி/Female To Male Transgender(FTM)
பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாடை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். திருநரில் இன்னொரு பிரிவு
This term refers to individuals who consider themselves as Men , but born as Women. These individuals have opted out of their biological sex, or plan to opt, through sex-reassignment surgery. This is to align their external sexual characteristics with their mental sex.
ட்ரான்ஸ்செக்சுவல்/Transexual
பிறப்பால் ஒரு பாலும், மன அளவில் வேறு பாலினத்துடன் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாடை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள்.
This term refers to individuals who have opted, or plan to opt, through sex-reassignment surgery, to align their external sexual characteristics with their mental sex.
மாறு பட்ட பாலுணர்வு உள்ளவர்கள்/LGBT or Queer
மாறு பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்
நங்கை-நம்பி-ஈரர்-திருநர் இவர்கள் அனைவரையும் மொத்தமாக குறிப்பிடும் சொல்.
People with alternate sexualities.
Used to collectively refer Lesbians-Gays-Bisexuals-Trans Gender/Tran sexual people
பலபாலீர்ப்பு/Pansexuality
மற்றும் சிலர் ஆண்/பெண் என்னும் வேறுபாட்டைக் கடந்த பாலீர்ப்பு
Pansexuality refers to attraction that includes males, females and transgender people. Sometimes, people use the term to refer to attractions that are not based on sex of the individual(s) concerned.
பெருமை/Gay Pride
நங்கை-நம்பி-ஈரர்-திருநர் இப்படி மாறுபட்ட பாலுணர்வு கொண்டர்வர்கள் தங்கள் பாலுணர்வையும், பால் அடையாளங்களையும் எண்ணி கூனி குறுகாமல், பெருமித கொள்வதை “பெருமை” என்று குறிபிடுகிறோம்
LGBT pride or gay pride is the concept that lesbian, gay, bisexual, and transgender (LGBT) people should be proud of their sexual orientation and gender identity.
நிமிர்ந்த நன்னடை/Pride Parade
நங்கை-நம்பி-ஈரர்-திருநர் இப்படி மாறுபட்ட பாலுணர்வு கொண்டர்வர்கள் தங்கள் பாலுணர்வையும், பால் அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் போற்றும் எல்லா நிகழ்ச்சிகளையும் குறிப்பாக அதற்காக நடத்தப்படும் ஊர்வலத்தையும் “நிமிர்ந்த நன்னடை” என்று அழைக்கிறோம்.
Pride parades for the LGBT community (also known as gay pride parades, pride events and pride festivals) are events celebrating lesbian, gay, bisexual, and transgender (LGBT) culture
வெளியே வருதல்/Coming Out
மாறுபட்ட பாலுணர்வு உள்ளவர்கள் அதை அறிந்து ஏற்றுக்கொள்வதையும் பின்பு தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கும் அதை தெரிவிப்பதையும் தான் வெளியே வருதல் என்று அழைக்கிறோம்.
Coming out is the process by which individuals accept their own gay, lesbian or bisexual orientation or transgendered nature, and then let friends and family members know about this aspect of themselves