கவிதை: வழிப்போக்கன்
ஆகாத காலம் அரைக்கணங்களாய் அகல
போகாத ஒரு ஊர் பொழுதோடு போகிச்சேர
வேகாது கொஞ்சம் வெயிலும்தான்தான் தணிய
சாகாது காத்திருந்தேன் சாலைவழி செல்ல
ஏழாறு திக்கும் ஒரு ஈ காகமன்றி
கோளாறு கொண்ட நெஞ்சு கொதிக்கத்தான் தொடங்க
மீளாது மறந்த எண்ணங்கள் மேலுமெழ
வீழாத கண்ணீர் வழியுந் தருவாயில்
பாரத திசையின் தோன்றி பயணி ஒருவன் வந்தான்
புன்னகை ஒன்று கண்டு பூத்தது எந்தன் நெஞ்சு
சின்னதாய் அறிமுகம் செய்து செல்திசை விசாரித்து
கண்ணதால் கண்டு கண்டு களிப்பும் சற்று கொண்டேன்
என்னைப் போல் ஒருவன் என்றான், அவனுக்கு நண்பன் என்றான்
தன்னைப் போல் இல்லை எனினும், தனக்கு மிக நெருக்கம் என்றான்
வண்ணத்தின் ஒலிகள் போல ஆயிரம் கதைகள் சொன்னான்
எண்ணத்தின் ஏக்கம் எல்லாம் ஒரு கணம் உறங்க வைத்தான்
வெள்ளத்தின் பாய்ச்சல் போலே விரைந்து விட்ட மனதில்
கள்ளத்தனமாய் ஒரு கலக்கம் காதல் தனைப்போலே
சொல்லித்தான் பயனுமென்ன, அதைவிட சொற்கள் கேட்டு நின்றேன்
எண்ணிக்கை மறந்த நொடிகள் எத்தனையோ நீங்கிவிடினும்
இன்றெல்லாம் திகட்டா அவை இன்னமும் வேண்டிடுங்கால்
சென்றிடும் இடம் செல்ல வந்தது ஓரூர்தி
தென்றலின் ஊரென்றான், தன்னது அதுவென்றான்
கண்களில் உறக்கம் என்றான், தோள்சாய்ந்து தூங்கி விட்டான்
என்னது உறங்கா மனம், எத்தனை கனாக்காண
சொன்னது நினைவின் ஒலித்தது, அவன் ஊரும் வந்து சேர
கண்டதில் களிப்பென்றும், மீண்டும் காண்போமென்றும்
சென்று வருவேனென்றும், சொன்ன கணம் மறைந்தான்
சோதியில் இரவுதனில்
யாருக்குப் பிள்ளையோ, எவளுக்குக் கணவனோ,
பாலையில் தூரல் போலே சின்னதாய் சொந்தம் தந்தான்
யாருக்குப் பிள்ளையோ, எவளுக்குக் கணவனோ,
பாலையில் தூரல் போலே சின்னதாய் சொந்தம் தந்தான் –
Beautiful!
Says volumes about meaningful ‘acquaintances’ that are never recognized by us in our lives. Reminds me of a story where a gay guy goes to the funeral of one with whom he had just had a single sexual encounter. Memories that people make in the lives of each other are short and beautiful just like the poem!