Skip to content

Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை

ஓரினம்
🔊 Listen
  • ஓபன் மைன்ட்ஸ் காம்பைன்
  • வீடியோ: கான்டம் (ஆணுறை) உபயோகம்
  • வெளியே வரும் கதைகள்
  • இஸ்லாம்
  • ஊடகங்களுக்கான உதவிக் கையேடு
ஓரினம்
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை

நிபுணர்களின் கருத்து

Home / வளங்கள் / மருத்துவ பணியாளர்கள் / நிபுணர்களின் கருத்து

பாலீர்ப்பை மாற்றும் முயற்ச்சிகள் அறிவியல்பூர்வமற்றவை.

பாலீர்ப்பை மாற்ற பயன்படுத்தப்படும் மருத்துவ வழிமுறைகள் எதுவும் இதுவரை சரி என்று நிரூபிக்கப்படவில்லை. இந்த விதிமுறைகள் நன்மையை வீட தீமையே விளைவிக்கிறது. பாலியல் சீர்கேடு, மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற அபாயகரமான விளைவுகளை உண்டாக்குகிறது. தன்பாலீர்ப்பு மனித பன்மையில் ஒரு அங்கம் என்று மருத்துவ விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டு விட்ட இந்த நாட்களில், மருத்துவ சமூகம் பாலீர்ப்பை மாற்றும் வழிமுறைகளை அங்கீகரிப்பதில்லை, பரிந்துரைப்பதில்லை. ஆனால் சில மதச்சார்புடைய குழுக்களும், மருத்துவர்களும், பாலீர்ப்பை மாற்ற முடியும் என்று கூறி, சரியாக நிரூபிக்கப்படாத மருத்துவ வழிமுறைகளை கையாளுகிறார்கள். இவை அறிவியல் தரநிர்ணயங்களுக்கு முன் நிற்கமுடியாது. நம்மை நம்பி வருபவருக்கு, கேடு எதுவும் விளைவிக்கக்கூடாது என்ற அடிப்படை மருத்துவ கொள்கையை இந்த மருத்துவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

– Dr. KS Jacob, Department of Psychiatry, Christian Medical College, Vellore, Tamil Nadu.
(The Hindu, Chennai editorial Date: 25/07/2009)

தன்பாலீர்ப்பு ஒரு நோயல்ல.

கருப்பாக பிறந்தவர்கள், “சிகப்பாக வேண்டும்” என்ற எண்ணத்தில் எப்படி கணக்கிடமுடியாத நேரமும், பணமும் செலவழிக்கிறார்களோ, அதுபோல மாறுபட்ட பாலீர்போ அல்லது பாலடையாளமோ கொண்டவர்கள், பல முறை, மாற்று சிகிச்சை என்கிற பேரில், மிகவும் கொடுமையான, விலையுயர்ந்த சிகிச்சை முறைகளுக்கு தள்ளப்படுகிறார்கள். எப்படியாவது அவர்களை மற்றவர்களை போல மாற்றி, திருமணத்துக்கு தயாராக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறது நம் சமுதாயம். மருந்து, மாத்திரை, யோகா, மனப்பயிற்சி என்று பல பாலீர்ப்பை மாற்றும் சிகிச்சைகள் இன்று நம் நாட்டில் வழங்கப்படுகிறது. நான் அடித்து சொல்கிறேன் : இது போன்ற சிகிச்சைகளினால் எந்த பயனும் இருக்காது. தாபாலீர்ப்பை குணப்படுத்தமுடியாது. ஏனென்றால் முதலில் அது ஒரு நோயே கிடையாது!

– Dr. Vijay Nagaswami, Psychiatrist, Chennai.
(The Hindu Date: 25/6/2011)

உங்களை நீங்களே ஏற்றுக்கொளுவது அவசியம்.

ஒருவருக்கு தன்பாலீர்ப்பு இருக்கிறது என்றால், அவர்களுக்கு தனது பாலினர் மீதுதான் பாலீர்ப்பு ஏற்ப்படும், எதிர் பாலினர் மீது ஏற்ப்படாது. இது போன்றவர்களுக்கு எனது அறிவுரை: உங்களது பாலீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இது இயற்க்கைக்கு முரணான விஷயமல்ல. உங்கள் தப்போ, பிழையோ அல்ல. நீங்கள் இதை விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை. நீங்கள் பிறந்தது இப்படி. தன்பாலீர்ப்போடு இருப்பதால் நீங்கள் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. உங்கள் பாலீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பயனுள்ளவராக ஆகலாம்.

– Dr. D. Narayana Reddy, Sexologist
(In online advice column to a homosexual man)

தன்பாலீர்ப்போ அல்லது இருபாலீர்ப்போ இயற்க்கைக்கு முரணான விஷயமல்ல. இதை மாற்றவோ, திருத்தவோ முடியாது

கவலையுடன் ஒரு தந்தை என்னிடம் கேட்டார் “டாக்டர், என் பையனை கொஞ்சம் பாருங்க. அவன் கல்யாணம் வேண்டாங்கறான். பொண்ணுங்க மேல ஈர்ப்பு இல்லை, பசங்க மேல தான் ஈர்ப்பு இருக்கு, நான் ஒரு தன்பாலீர்ப்பாளன் அப்படின்னு சொல்றான்”. அவருக்கு நான் சொன்ன அறிவுரை – “உங்க பையன் சொல்றது உணமைதான். அவனை கல்யாணம் பண்ணச்சொல்லி கட்டயப்படுத்தாதீங்க.” அந்த தந்தை அதோடு நிறுத்தவில்லை. “தயவுசெஞ்சு அவனை எதவாது மருந்து மாத்திரை குடுத்து மாத்துங்க. இல்லை மனப்பயிற்சி ஏதாவது? இதெல்லாம் மனசுல தான் இருக்கு. அவன் நினைச்சா மாறலாம். ஊரு உலகத்துக்கு நாங்க என்ன சொல்வோம்? இதை யாரும் ஏத்துக்கமாட்டாங்க.” அவரோட கவலை எனக்கு புரிந்தது. ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலாது என்று சொன்னேன். உண்மை என்னவென்றால் அவர் சொல்கிற மாதிரி தன்பாலீர்ப்பு வெறும் மனசு சமந்தப்பட்ட விஷயம் இல்லை. ஒருவர் நினைத்தால் அவரது பாலீர்ப்பை மாற்ற முடியாது. தன்பாலீர்ப்போ இல்ல எதிர்பாலீர்ப்போ எப்படி ஏற்ப்படுகிறது என்று யாராலும் சொல்லமுடியாது. இதுவரை இது, அது என்று பல காரணங்கள் சொல்லப்பட்டன. சுரப்பி, மரபணு, பழக்கம், இப்படி பல காரணங்களாக கருதப்பட்டன. ஆனால் இதில் ஒன்று கூட நிரூபிக்கப்படவில்லை. பாலீர்ப்பு ஒருவர் விருப்பப்பட்டு தேர்ந்தெடுப்பதில்லை என்பது தான் உண்மை. நாம் அனைவரும் பிறந்தது ஒரு சில விதத்தில் – பலர் எதிர்பாலீர்ப்பாளர், சிலர் தன்பாலீர்ப்போ அல்லது இருபாலீர்ப்போ கொண்டவர்கள். இது இருபாலீர்ப்போ இயற்க்கைக்கு முரணான விஷயமல்ல. மருத்தவ விஞ்ஞானம் தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பை ஒரு மாறுபட்ட பாலீர்ப்பாக ஏற்றுக்கொண்டுள்ளது. இவற்றை மாற்றவோ, திருத்தவோ முடியாது. உங்கள் அன்புக்குரியவர், தன்பாலீர்ப்போ, இருபாலீர்ப்போ கொண்டிருப்பது உங்களுக்கு முதலில் அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் அதிர்ச்சியை கடந்து, அதை புரிந்து, ஏற்றுக்கொள்ளுவது அவசியம். பாலின சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் பல கொடுமைகளுக்கு அடிப்படை காரணம் மக்களில் அறியாமை தான், இவர்களின் மாறுபட்ட பாலீர்ப்போ அல்லது பாலடையாளம் அல்ல.

– Dr. D. Narayana Reddy, Sexologist
(Deccan Chronicle Date 22/03/2011)

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாலம் கொண்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அவர்கள் மீது காட்டப்படும் வெறுப்பே காரணம்

நான் பல நங்கை மற்றும் நம்பிக்களுக்கு மனநல மருத்துவ ஆலோசனைகள் வழங்கியிருக்கிற அனுபவத்தில் நான் சொல்கிறேன், அவர்களுக்கு இருக்கும் மனபிரச்சனை ஒன்றுதான். இந்த சமுதாயம் அவர்கள் மீது காட்டும் வெறுப்பு தான் அது. தங்கள் பாலீர்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது (வெளியே வருதல்) பற்றிய பயம், இந்த சமுதாயம் அவர்கள் மீது காட்டும் வேற்றுமைபடுத்துதல் மற்றும் ஒதுக்குதல், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் கட்டயப்படுத்தப்படுவது, அவர்கள் மனம் மற்றும் உடல்நலத்தை பாதுகாக்க தேவையான உதவியும் வளங்களும் இல்லாமல் இருப்பது, இவையெல்லாம் அவர்களின் பிரச்சனைகள். இதேல்லாம் கடந்து அவர்கள் தங்களது சமூகத்தில் இருக்கும் சிலரின் வழிநடத்துதலில், தைரியமாக, மலர்ச்சியுடன் தலைநிமிர்ந்து நிர்ப்பது என்னை வியக்க வைக்கிறது.

– Dr. Vijay Nagaswami, Psychiatrist, Chennai.
(The Hindu Date: 25/6/2011)

பாலீர்ப்பு பாகுபாடில்லாமல் எல்லோரையும் மரியாதையுடனும், கருணையுடனும், நடத்துவது மருத்துவ பணியாளர்களின் பொறுப்பு

பாலீர்ப்பு பாகுபாடில்லாமல் எல்லோரையும் மரியாதையுடனும், கருணையுடனும், நடத்துவது மருத்துவ பணியாளர்களின் பொறுப்பு. மருத்துவதுறை மாணவ மாணவிகளுக்கு, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் பற்றிய பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் அவசியம். இந்த துறையில் இந்தியாவில் ஆராய்ச்சி மிகவும் முக்கியம். அதன் மூலமாகத்தான் இந்த பிரிவினரை பற்றி புரிந்துகொள்ள முடியும். பாலீர்ப்பு பன்மைபட்டது. யார் எந்த பாலீர்ப்பு கொண்டவர்கள் என்பது முக்கியமல்ல. மனிதத்தை போற்றுவது முக்கியம்.

– Dr. KS Jacob, Department of Psychiatry, Christian Medical College, Vellore, Tamil Nadu
The Hindu, Chennai editorial Date: 25/07/2009


(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்

Orinam, founded in 2003, is an all-volunteer unregistered collective of LGBTIQA+ people and allies based in Chennai, Tamil Nadu. It functions as a support, cultural and activist space.

Follow our socials for the latest updates

Instagram chennai.prideFacebook orinam.netTwitter chennaipride

All content © ஓரினம் & Contributors 2025 | Designed by ஓரினம்

  • ஓபன் மைன்ட்ஸ் காம்பைன்
  • வீடியோ: கான்டம் (ஆணுறை) உபயோகம்
  • வெளியே வரும் கதைகள்
  • இஸ்லாம்
  • ஊடகங்களுக்கான உதவிக் கையேடு
Skip to content
Search
Open toolbar Accessibility Tools

Accessibility Tools

  • Increase TextIncrease Text
  • Decrease TextDecrease Text
  • GrayscaleGrayscale
  • Negative ContrastNegative Contrast
  • Light BackgroundLight Background
  • Readable FontReadable Font
  • Reset Reset