Chennai Rainbow Pride / Self Respect March : சென்னை வானவில் சுயமரியாதை பேரணி
Chennai invites you to its annual Rainbow Pride / Self Respect march tentatively scheduled for Sunday, June 30, 2024.
Looking forward to a big turnout at the Pride march. Apart from Chennai residents, people are expected to arrive – and some will arrive Sunday – from Bangalore, Coimbatore, Hyderabad, and Mumbai. We also expect ally groups and students groups to join, besides the community groups and NGOs marching as the Tamil Nadu Rainbow Coalition.
We will have placards in Tamil, English, and some in other languages known to volunteers at the placard-making event. If you are approached by media for quotes, we ask that you mention points listed in the press releases.
Water will be available at the venue, but feel free to bring your own, and to dispose of your trash in bins located on the venue.
Again, thanks to all the individuals and collectives who have been working hard for Pride events, including the march.
Please check out the Frequently Asked Questions here.
See you soon!
ஜூன் 30, 2024 நடைபெறவிருக்கும் சென்னை வானவில் சுய மரியாதை பேரணிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சென்னை வானவில் சுய மரியாதை பேரணிக்கு அணிதிரண்டு நீங்கள் எல்லோரும் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். சென்னைவாசிகள் மட்டுமின்றி – பெங்களூரு, கோயம்புத்தூர், ஹைதராபாத், மும்பை – என்று பல நகரங்களிலிருந்து நண்பர்கள் பேரணியில் பங்கேற்க வருவார்கள். சிலர் ஞாயிறு காலை வந்து சேர்வார்கள். நம் சமூகத்தினர், நம் நண்பர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனத்தின் பணியாளர்களும், பதினெட்டுக்கும் மேற்ப்பட்ட தொண்டு நிறுவனங்களும், என்.ஜி.ஒ நிறுவனங்களும் தமிழ்நாடு வானவில் கூட்டணியுடன் இனைந்து, பேரணியில் பங்குபெற இருக்கிறார்கள்.
தமிழ் தவிர, ஆங்கிலம், ஓடியா, மராத்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் பலகைகள், போஸ்டர்கள் தயாரிக்கப்படும்.
பேரணியில் மீடியா நண்பர்கள் உங்களிடம் கேள்விகள், கருத்துக்கள் கேட்டால், தயவுசெய்து தமிழ்நாடு வானவில் கூட்டணியின் மீடியா ரிலீசில் இருக்கும் கோரிக்கைகளை விவரியுங்கள். இது நம் எல்லோரும் ஒரே குரலில், ஒருமித்து நமது கோரிக்கைகளை வலியுறத்த மிகவும் உதவும்.
குடிக்க தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். நீங்களே தண்ணீர் கொண்டு வரமுடிந்தால், தயங்க வேண்டாம். தயவுசெய்து தண்ணீர் பாட்டில்களை பீச்சில் போடாமல், உரிய குப்பை தொட்டிகளில் போடவும். பேரணிக்கான எழுத்துப்பூர்வமான போலீஸ் அனுமதி பெறப்படும்.
சென்னை வானவில் விழா நிகழ்சிகளையும், சென்னை வானவில் சுய மரியாதை பேரணியையும் வெற்றிகரமாக நடைபெற செய்ய, கடுமையாக உழைத்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நன்றி!
Archives: