ஆண்-பெண் உறவுகளையும் திருமணத்தையும் முக்கியமாகக் கருதும் மற்றும் ஆண்மை பெண்மை என்று கடுமையான வரையறைகளை வலியுறுத்தும் இந்த சமூகத்தில் மாறுபட்ட பாலீர்ப்பு உள்ளவர்களாக வாழும் நம்மில் பலர் ஒதுக்கப்பட்ட சிறுபான்மையாக நம்மை உணர்கிறோம். கீழ்கண்ட உண்மைகளை வலியுறுத்த, அறிவியல் ரீதியான அறிவுரை மற்றும் நம்மைப்போன்றவர்களின் சமூகத்திற்குள்ளே உதவி மிகவும் அவசியம்:

  • நாம் கெட்டவர்களோ, வழிதவறியவர்களோ, நோயாளிகளோ இல்லை.
  • நாம் வெறுக்கப்படவேண்டியவர்களோ, குணப்படுத்தப்படவேண்டியவர்களோ இல்லை
  • நாம் இரண்டாம் தர குடிமக்கள் இல்லை
  • நம் விருப்பம் போல் வாழவும், காதலிக்கவும் நமக்கு உரிமை உண்டு
  • நாமும் இந்த சமுகத்தின் மதிக்கபடவேண்டிய அங்கத்தினர்கள்
  • நம் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளை நம்மால் பூர்த்திசெய்யமுடிவதில்லை என்பதால் நாம் அவர்களை எதிர்க்கிறோம் , நிராகரிக்கிறோம் என்று அர்த்தமில்லை.

 

குடும்பம் மற்றும் சமூகத்தில் நிராகரிக்கப்படுவது, எதிர் பாலின் மேல் ஈர்ப்பு இல்லை என்றாலும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்த படுவது, மனஅழுத்தம், தற்கொலைக்கான எண்ணம் – இவை எல்லாம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சில.

இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தனியே இல்லை. உங்களை போன்ற பலரின் அமைப்புகள் இணையத்திலும், இணையமற்ற பல இடங்களிலும் இருக்கின்றன. அவர்களை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும் என்று உங்களை உக்குவிக்கிறோம். (இது போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள கே பாம்பே அமைப்பு வெளியிட்ட படைப்பை இங்கே காணலாம்)
சென்னை – மூவன்பிக் (எம்.பி), சகோதரன்

  • 
பாம்பே – கே பாம்பே, ஹும்சபர் டிரஸ்ட், எல்ஏபிஐஏ
  • பெங்களூர் – குட் அஸ் யு , சங்கமா
  • கேரளா- சகாயத்ரிகா

 

This post is also available in: English