திருனர் ஆவணங்கள்
திருனர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம், பால் மாற்று சிகிச்சைக்கு பிறகு, அவர்களது புதிய பாலடையாளத்திற்க்கு ஏற்றார்போல அவர்களது ஆவணங்களை மாற்றி அமைப்பது. உதாரணத்திற்கு பிறப்பு சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ், வொட்டர் ஐ.டீ போன்ற ஆவணங்கள். அவர்களுது தோற்றத்திற்கு ஏற்றார்போல ஆவணங்கள் இல்லையெனில், திருனர்கள் பல இடங்களில், கிண்டல், கேலி, அவமானம், முறைகேடு, ஒத்துக்கப்படுதல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள்.
இந்தியாவில் திருனர்கள் தங்களது முக்கால்வாசி ஆவணங்களை மற்ற வழிமுறைகள் உள்ளன. ஆனால் நாங்கள் ஆராய்ச்சி செய்த வரையில், பிறப்பு சான்றிதழை மாற்றி அமைக்க முடியாது.
இந்தியாவில் வழங்கப்பட்ட ஆவணங்களில் பால் மாற்றம் செய்வதற்கான குறிப்புக்கள்:
1. முதல் படி, பால் மாற்று அறுவை சிகிச்சை. நீங்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறீர்களோ, அந்த மருத்துவமனை பணியாளர்கள் உங்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குவார்கள். எப்படி ஆவணங்களில் பால் மாற்றம் செய்வது என்பதற்கான வழிமுறைகளை விளக்கிச் சொல்லுவார்கள்.
2. சிகிச்சைக்கு பிறகு, பால் மாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான சான்றிதழை மருத்துவமனையிடமிருந்து பெறவும்.
3. பால் மாற்றம் செய்யப்பட்டது என்று நாளிதழில் விளம்பரம் ஒன்று குடுக்கவும் (உதாரணம் கீழே)
—- வயதான நான், ————-(தேதி) பிறந்த நான், ————- என்ற முகவரியில் வசிக்கும் நான், இதுவரையில் திரு/திருமதி/செல்வி ———— என்ற பெயரில் அழைக்கப்பட்ட நான், பால் மாற்று சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். இன்று (தேதி) முதல் எனது பெயர் திரு/திருமதி/செல்வி ———–
4. பால் மாற்றம் செய்யப்பட்டது என்று சுய சான்றிதழையும் தயாரித்து அதில் நோட்டரி கையெழுத்து பெறவும்.
5. நீங்கள் தற்போது வேலையில் இருந்தால்,
- மருத்துவமனயிடமிருந்து பெறப்பட்ட பால் மாற்று சான்றிதழ்
- நாளிதழ் விளம்பரம்
- சுய சான்றிதழ்
ஆகிய மூன்றையும் உங்கள் அலுவலகத்திடம் சமர்பித்து, உங்கள் அலுவலக ஆவணங்களில் புதிய பால் மற்றும் பெயரை பதிவு செய்ய கேட்கவும். பின்பு அதை அத்தாட்சி செய்யும் விதமாக புதிய அடையாள அட்டையையும் கேட்டு பெறவும்.
6. கீழ்க்கண்ட அலுவலகங்களிடம் உங்களது அணைத்து ஆவணகளையும், முறையான விண்ணப்பப் படிவங்களையும் சமர்பிக்காவும்
- வாக்காளர் அடையாள அட்டை
- டிரைவிங் லைசன்ஸ்
- ரேஷன் கார்ட்
- வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்
- பான் கார்ட்
- பாஸ்போர்ட்
இவர்கள் செய்திருக்கிறார்கள்!
“இந்திய அமைப்பு அப்படி ஒண்னும் மோசமில்லை! என்னோட ஆவணங்கள்ள பால் மாற்றம் செய்யறது ரொம்ப ஒன்னும் கஷ்டமாயில்ல. டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் ரெண்டுலையும் மாத்தியாச்சு. பான் கார்ட் அப்ளிகேஷன் குடுத்திருக்கேன்.” – கசல் (“கசல் ஹோப்ஸ்” வலைப்பதிவிலிருந்து, Nov 2009)
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என்னோட வாக்காளர் அடையாள அட்டையில் பால் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்தேன். முதல்ல பதில் ஒண்னும் இல்லை. போன வாரம் மாத்தியாச்சுனு சொல்லி கடிதம் வந்தது” பாஸ் போர்ட், பான் கார்ட் என்று ரோசின் பிற ஆவணங்களிலும் பால் மாற்றம் செய்தாகி விட்டது.” – டைம்ஸ் ஆப் இந்தியாவில் ரோஸ் வெங்கடேசன், Apr 2010
தமிழ்நாடு கெஜட்டிலிருந்து ஒரு மாதிரி
மூலம்: NTDV.com, Times of India, GazalHopes blog
நன்றி: ரஷ்மி, கல்கி சுப்பிரமணியம்
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்