ஓரினம் பற்றி
எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம் என்று பொருள்பட இந்த தளம் “ஓரினம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
எல்லா பால், பாலடையாளம், பாலீர்ப்பு கொண்டவர்களுக்கும் தங்கு தடையின்றி மனித உரிமைகள் கிடைக்கப்பெற்ற வேண்டுமென்பது எங்களது இலக்கு.
நமது சமுதாயத்தில் (குறிப்பாக தமிழர் சமுதாயத்தில்), மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி விழிப்புணர்வை கொண்டு வருவதும், அவர்கள் மேல் காட்டப்படும் வெறுப்பையும், வேற்றுமைப்படுத்ததுலையும் களைவதும் எங்களது குறிக்கோள். மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள், எங்களது ஆதரவாளர்கள் ஆகியோர் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு இடத்தை உருவாக்குவதும், அதை நிலைநிறுத்துவதும் எங்களது விழைவு.
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.
மகாக்கவி சுப்பிரமணிய பாரதியின் இந்த வார்த்தைகள் எங்களது தளத்தின் அடிப்படை வாக்கியம். எல்லோரும் சமம், வேற்றுமையில் ஒற்றுமை – என்று மனித பன்மையை போற்றும் பொருள் பெற்ற இந்த வாக்கியம், நமது திருநாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு ஊந்துதலாக அமைந்தது. இதே வாக்கியம் தான் இன்று எங்களின் மனித சமஉரிமை போராட்டத்திற்கு ஊந்துதல்.
எங்களது லோகோ, பன்மைபட்ட பாலடையாளத்தையும், பாலீர்ப்பையும் குறிக்கும் ஒரு படம். இதில் காணப்படும் பால் அடையாளங்கள் ஒன்றாக இணைந்து “O” என்ற எழுத்தை உருவாக்குவது, பல விஷயங்களில் நாம் வித்தியாசப்பட்டாலும், நாம் அனைவரும் ஒன்று என்பதை குறிக்கிறது.
2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது ஓரினம்.நெட் தளம். இந்த தளம் 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்.பீ. தளத்தின் அங்கத்தினர்களால் உருவாக்கப்பட்டது. ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால்அடையாளம் பற்றிய தகவல்தளம். நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்று நம்மில் அனைவரது தளம் இது. நமது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோருக்கும் இதில் இடம் உண்டு.
வளங்கள்: கல்வி நிலையங்கள், பணியிடம், சமயம் மற்றும் ஆன்மிகம், சட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு, ஊடகங்கள், மருத்துவ பணியாளர்கள்,குடும்பத்தினர் என்று எல்லோருக்கும் பயனளிக்கும் தகவல் வளங்களை இந்த தளத்தில் நீங்கள் காணலாம்.
எங்கள் குரல்: ஓரினம்.நெட்டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை, மற்றும் பல படைப்புகளை காணலாம்.
ஓரினம்.நெட் எந்த நிறுவனத்தாலும் நடத்தப்படவில்லை, முதலீடு செய்யப்படவில்லை. எம்.பீ. அங்கத்தினர்களும், எங்களது நலம் விரும்பிகளும், தாங்களே முன்வந்து, தங்களது நேரம், பணம் இவற்றை செலவழித்து இந்த தளத்தை நடத்துகிறார்கள். நீங்கள் எங்களுக்கு உதவ விரும்பினால், தள பராமரிப்பிற்கு உங்கள் நேரம் மற்றும் பணம் நன்கொடை செய்ய விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
ஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா
ஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
ரீல் டிசயர்ஸ் CIQFF – சென்னை சர்வதேச பாலின-பாலீர்ப்பு திரைப்பட விழாவின் அதிகார பூர்வ தளம்.
377 கடிதங்கள் – Letters written to the Chief Justice of India, Supreme Court of India, why decriminalisation of same-sex relationships matters.
நன்றி:
- Branding: Adarsh Prasanna (Orinam), Aniruddhan (Reel Desires), Rajani and Shri (Campaign for Open Minds)
- Logo and masthead design: Raul Gabrielle (Orinam, Chennai Pride and Campaign for Open Minds), Aravind (Make Justice in India)
- Art: Gokul, Nayan, Rajat, Trinetra
- Orinam content sourcing, editing, writing, review and translation:
- Akhil, Arthi, Arvindh, Ashley, Bessi, Danish, Gowthaman, Gee, Madhumitha, Mayur, Niruj, Ondede, Ritesh, Ramki, Rajani, Sami, Shambhavi, Shri, Shyam B. Soorya, Srini, Surabhi Shukla, Velu, wallflower and many others
- Orinam website design, development, interface with developer, etc.:
- Felix, Rajani, Ramki, Shri, Velu, wallflower and others
- Orinam financial contributions for website (including CIQFF and 377 archives), and events including Quilt, CIQFF, workshops and support group meetings
- Aayush, Alex, Felix, Ganesh, Guhan, Karthik, Prahasini, Praveen, Sameer, Shri, Sundar, Vidhya, wallflower and other anonymous supporters