வண்ணங்கள்
வண்ணங்கள், 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் மாற்று பாலின-பாலீர்ப்பு சமூக மக்கள் மற்றும் தோழமை கூட்டமைப்புகளால் நடத்தப்படும் ஒரு கலாச்சார நிகழ்வு. சென்னையில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் மற்றும் ஈர் முரையில் சேராத பாலின-பாலீர்ப்பு (LGBTQ) விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று. வண்ணங்கள் முதலில் சக்தி ரிசோர்ஸ் சென்டர் (Shakti Resource Center) மற்றும் ஓரினம் (முன்பாக எம் பி | MP) அமைப்புகளால் கூட்டாக 2009இல் நிறங்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
மாற்று பாலின-பாலீர்ப்பினர் தங்களுடைய பிரச்சனைகளை கலை மூலமாக முன்னிருத்திவருகின்றனர். கலை மூலமாக தங்களுடைய குரல்களை வெகுஜனத்திற்கு கொண்டு செல்வதில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நோக்கு உண்டு. சிலருக்கு மருத்துவ பிரச்சனையை வெகுஜனத்திற்கு கொண்டு செல்ல உபயோகப்படுகிறது. சிலருக்கு, தங்களுடைய உரிமைகளுக்கான குரலாக இருக்கிறது. காலம் காலமாக இயங்கி வரும் கலையை சிலர் மாற்றி அமைத்தும் அரங்கேற்றி வருகின்றனர். சிலர் தற்கால இலக்கியம் மற்றும் நாடகம் மூலமாக தங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்திகின்றனர்.
பெரும்பாலான கலைஞ்கர்கள் சென்னையை சார்ந்தவர்களாக இருந்தாலும், கும்பகோணம், பெங்களூரு, ஹைதிராபாத் மற்றும் அமெரிக்காவிலிருந்து கலைஞர்கள் அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள்.
இது போல் சோதனை முறையில் நடத்தப்படும் பல கலை நிகழ்வுகளை வழங்க வண்ணங்கள் வழி வகுக்கிறது. அது மட்டும் அன்றி சென்னையில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நிகழும் வானவில்-சுயமரியாதை விழாவின் ஒரு அங்கமாகவும் வண்ணங்கள் திகழ்கிறது.
Click here for Vannangal 2018 invitation.