கின்சி பாலீர்ப்பு அளவுகோல்
பாலீர்ப்பை மதிப்பிட 1948 ஆம் ஆண்டு அல்ப்ரெட் கின்சி மற்றும் அவரது உதவியாளர்கள் வார்டெல பொமெராய் , கிள்ய்டு மார்டின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது கின்சி அளவுகோல்.
பாலீர்ப்பு பன்மைபட்டது, ஆனால் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆண்-பெண் இவர்களுக்கிடையே ஏற்படும் பால் ஈர்ப்பு மட்டுமே(எதிர்பாலீர்ப்பு). பல ஆண்டுகள் நடத்திய விரிவான ஆய்விற்கு பிறகு, கின்சி மனிதனின் பாலீர்ப்பை எண் பூஜியதிலிருந்து எண் ஆறு வரை அவரது அளவுகோலில் மதிப்பிட்டு வகைப்படுத்தினார்.
அளவுகோலில், பெரும்பாலும் காணப்படும் ஆண்-பெண்ணிற்கிடையே ஏற்படும் எதிர்பாலீர்ப்பு எண் பூஜியத்திலும் , ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் இவர்களுக்கிடையே ஏற்படும் ஒருபாலீர்ப்பு அல்லது தன்பாலீர்ப்பு எண் ஆறிலும் இடம்பெறுகிறது. இதில் சுவாரசியமான கண்டுபிடிப்பு என்னவென்றால் பூஜியத்திற்கும் ஆறிற்கும் நடுவிலேயும் பல ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது தான். இவர்களை தான் இருபாலீர்ப்பு உள்ளவர்கள் என்று அழைக்கிறோம்.
கின்சியின் இந்த அளவுகோலை கீழ் இருக்கும் படத்தில் காணலாம்.
[1] – முக்கால்வாசி எதிர்பாலீர்ப்பு உடையவர்கள், அரிதாக ஒருபாலீர்ப்பு (அல்லது தன்பாலீர்ப்பு) உடையவர்கள்
[2] – முக்கால்வாசி எதிர்பாலீர்ப்பு உடையவர்கள், அவ்வப்போது ஒருபாலீர்ப்பு (அல்லது தன்பாலீர்ப்பு) உடையவர்கள்
[3] – சம அளவில் எதிர்பாலீர்ப்பு மற்றும் ஒருபாலீர்ப்பு (அல்லது தன்பாலீர்ப்பு) உடையவர்கள்
[4] – முக்கால்வாசி ஒருபாலீர்ப்பு (அல்லது தன்பாலீர்ப்பு) உடையவர்கள், அரிதாக எதிர்பாலீர்ப்பு உடையவர்கள்
[5] – முக்கால்வாசி ஒருபாலீர்ப்பு (அல்லது தன்பாலீர்ப்பு) உடையவர்கள், அவ்வப்போது எதிர்பாலீர்ப்பு உடையவர்கள்
[6] – முற்றிலும் ஒருபாலீர்ப்பு (அல்லது தன்பாலீர்ப்பு) உடையவர்கள், சிறிதும் எதிர்பாலீர்ப்பு இல்லாதவர்கள்
எனது எண் என்ன ? இதற்கான தேர்வை எடுத்துக்கொள்வது எப்படி?
இதற்கென்று தனியாக தேர்வு எதுவும் இல்லை. அனுபவத்தின் மூலமாகவும் மற்றும் சுய ஆய்வின் மூலமாகவும் நீங்கள் என்ன எண் என்று அறிந்துகொள்ளலாம்.
பாலீர்ப்பு அளவுகோலை பற்றி மேலும் விவரங்களுக்கு கின்சி ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தை பார்க்கவும்.
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்