கழிப்பறை வசதி
திருனர்கள் (Transgenders) சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று, பணியிடங்களில் கழிப்பறை வசதி. திருனர் பணியாளர்கள் பலர் தங்களது பிறப்பு பாலுக்கான கழிப்பறையை உபயோகிக்க விரும்புவதில்லை. உதாரணமாக, ஆணாக பிறந்தாலும், தன்னை பெண்ணாக அடையாளம் காணும் (MTF) ஒரு பணியாளர், ஆண்களுடன் கழிப்பறையை உபயோகிக்க விரும்ப மாட்டார். திருனர்கள் அவர்கள் விரும்பும் கழிப்பறையை உபயோகிப்பதில், நியாயமாக பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது. அனால் சில சமயங்களில், மற்ற திருனர் அல்லாத பணியாளர்கள், இதை எதிர்க்கக்கூடும்.
உங்கள் பணியிடங்களில் திருனர் பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பும், உரிமைகளும் அவசியம். உங்கள் அலுவலக கொள்கைகளில், திருனர் பணியாளர்களை வேற்றுமைபடுத்தக் கூடாது, என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அப்படி செய்வதன் மூலம், மற்ற திருனர் அல்லாத பணியாளர்களுக்கு, அது ஒரு வழிகாட்டாக அமைகிறது. முதலில் கழிப்பறை போன்ற விஷயங்களில், எதிர்ப்பு தெரிவிக்கும் பணியாளர்கள் கூட, காலப்போக்கில் எதிர்ப்பை கைவிட்டு, அதை ஏற்றுக்கொள்ள கூடும். மேலும் பல வழியில் இந்த பிரச்சனையை அணுகலாம்.
- உங்கள் பணியிடங்களில் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான (Unisex), ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய (Single occupancy) ஒரு கழிப்பறையை நிர்மானியுங்கள். குறைந்தபட்சம் ஒன்று, நடந்து போகக்கூடிய தொலைவில்.
- உங்கள் வளாகத்தில் அப்படிப்பட்ட கழிப்பறை தற்போது இல்லையெனில், பலபேர் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளில் ஒன்றை, ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கழிப்பறையாக மாற்றுங்கள். எப்படி? ரொம்ப சுலபம். உள்ளே ஒரு தாழ்பாள். வெளிய “உபயோகத்தில் உள்ளது” என்ற ஒரு அடையாளம்.
- உங்களது வருங்கால கட்டிட திட்டங்களில் மறக்காமல் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை, எல்லா வளாகங்களிலும், சேருங்கள்.
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்