மருத்துவ பணியாளர்களின் கடிதம்
இன்டர்நேஷனல் கிளாசிபிக்கேஷன் ஆப் டிசிசெஸ் (ICD – 10) – வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WHO) மற்றும் த டியாக்நோஸ்டிக் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்கல் மானுவல் ஆப் மெண்டல் டிஸ்ஆர்டர் (DSM – IV அமெரிக்கன் சைகியட்ட்ரிக் அசோஸியேஷன் ) வரையறைபடி ஒருபாலீர்ப்பு ( தன்பாலீர்ப்பு/Homosexuality) குறைபாடு இல்லை என்பதை எங்களுடன் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஒருபாலீர்ப்பு ( தன்பாலீர்ப்பு/Homosexuality) மற்றும் இருபாலீர்ப்பு (Bisexuality) கொண்டவர்களை எதிர்பாலீர்ப்புக்கு (Heterosexuality) மாற்றுவதற்கான முயற்சிகள் மருத்துவத்தின் அடிப்ப்படை நியதிக்கு மாறானது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் இயற்கைக்கு புறம்பானவர்கள் அல்ல. எனினும் இதுவரையில் மருத்துவ சேவைகள் பெறுவதில் இவர்கள் எதிர்கொள்ளும் ஒதுக்குமுறை, வலி, அவமானம், பயம், வேதனை இவைகளை எங்கள் துறையை சேர்ந்த சிலர் கண்டும் காணாது இருந்திருக்கிறார்கள்.
மருத்துவ வல்லுநர்கள் என்ற வகையிலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் ஆதரவாளர்கள் என்ற முறையிலும் அச்சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் அவர்களின் பால் அடையாளம் மற்றும் பாலீர்ப்பு அடிப்படையின்றி, அவர்களின் சுய தேவைகளுக்கேற்ப நாங்கள் மருத்துவ உதவிகள் வழங்க இயல வேண்டும். இதில் எங்களது சுய விருப்பு வெறுப்பு தடையாக இருக்க கூடாது.
இம்மாற்றத்தை கொண்டுவரவும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாலம் கொண்டவர்களுக்கு மேல் இருக்கும் வெறுப்பை முடிவுக்கு கொண்டுவரவும், கீழ்க்கண்ட உறுதியினை ஏற்ப்போம்:
- மாற்றியமைப்பு சிகிச்சை (Conversion Therapy) அல்லது சீர்திருத்த சிகிச்சை முறைகள் மூலம் பாலீர்ப்பை மாற்றியமைக்க முடியும் என்று விளம்பரபடுதவோ பரிந்துரைக்கவோ மாட்டோம். இத்தகைய சிகிச்சைகள் ஆதாரமற்றவை, அறிவியல்பூரவமற்றவை.
- மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்குவதில் எங்களது நம்பிக்கை அமைப்பு, விருப்பு வெறுப்பு என எதுவும் குறுக்கிட விட மாட்டோம்.
- திருநம்பி (FTM Transgender) அல்லது திருநங்கைகள் (MTF Transgender) பாலினமாற்று அறுவை சிகிச்சைக்கு வரும் பட்சத்தில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சைத் தர நிர்ணயங்களைப் பின்பற்றுவோம்.
- உடல் மற்றும் மனநல சேவைகள் வழங்கும் அமைப்புகளில் மாற்றுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் சூழலை உருவாக்குவோம். மேலும் குறுகிய கண்ணோட்டத்துடன் அவர்களை மதிப்பிட மாட்டோம்.
- நாங்கள் வேலை பார்க்கும் இடங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களுக்கு எதிரான வெறுப்பை முற்றிலுமாக அகற்றவும், பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சம்பந்தமான தகவல்களை எங்களது துறை பயிற்சித் திட்டங்களில் சேர்க்கவும் இடைவிடாது முனைவோம்
ஆங்கில மூலம் கீழே. பக்கத்தின் இறுதியில் உள்ள படிவத்தில் கையெழுத்திடவும். எங்கள் மனமார்ந்த நன்றி!
[[petition-4]]