குயர் மக்களாகிய நாம் (We, the queer people)

கலை இலக்கியத்தை
அதிகம் விரும்பும்
குயர் மக்களாகிய நாம் தான்
தமிழ் பேசும் கிராமத்து இளைஞர்களை
மட்டமாக பார்க்கிறோம்
தலித் விடுதலையில்லாமல் குயர் விடுதலை இல்லை
என சமூக ஊடகங்களில் பதிவிடும்
குயர் மக்களாகிய நாம் தான்
ஒவ்வொரு கூட்ட முடிவிலும்
பிராமணர் சூத்திரர் என பிரிந்து நின்று புரளி பேசுகிறோம்
ஏற்றத் தாழ்வுகள் அற்ற மனிதச் சமூகம்
உருவாக வேண்டுமென அதிகம் பேசும்
குயர் மக்களாகிய நாம் தான்
Tops மேல்ஜாதி போலவும் Bottoms கீழ்ஜாதி போலவும்
பாரபட்சம் காண்கிறோம்
கலை வடிவம் – பாலினம் கடந்தது என்னும்
Drag Show வை தமிழ் படுத்திய
குயர் மக்களாகிய நாம் தான்
பறை எடுத்து வாசிப்பதற்கு
இன்னமும் கூட தயங்குகிறோம்
காமம் என்னும் கலையில் புணர்ச்சியை தாண்டி நிறைய இருக்கிறது
என்று பெரும்பான்மை சமூகத்தை ஏளனம் பேசும்
குயர் மக்களாகிய நாம் தான்
எத்தனை Inch இருக்கும்? Tight ஆவே இல்லையே?
என சிறுபான்மையாய் நடந்து கொள்கிறோம்
எங்களின் இயல்பை, அழகை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
என்று Heterosexuals க்கு அறிவுறுத்தும்
குயர் மக்களாகிய நாம் தான்
நீ அதிக feminine ஆ இருக்க, gay னு சொல்ற ?
என்று விலக்கி வைக்கிறோம்.
Cis-het Community க்கு,
Inclusive Community இன் முன் மாதிரியே
குயர் மக்களாகிய நாம் தான்
எனவே மாற்றமும் ஒற்றுமையும்
நம்மிலிருந்து துவங்கட்டும்
First shared by the author at Orinam’s Pride 2026 QUILT (Queering Literature) event on June 20, 2026, at the Goethe-Institut Chennai library. Kavin may be reached at jkavin_21 (Instagram)
